கேங்க்ஸ்டர் கதைக்கு ரெடியாகிறார் விக்ரம்.. 'சியான் 60' படத்தை இவர்தான் இயக்கப் போகிறாராமே..?
சென்னை: நடிகர் விக்ரமின் 60 வது படத்தை இந்த இயக்குனர் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் விக்ரம், இப்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 58 வது படம். அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
இவர், அருள்நிதி நடித்த டிமான்டி காலனி, நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படங்களை இயக்கியவர்.

பலவித கெட்டப்
ஹீரோயினாக கே.ஜி.எஃப் ஸ்ரீனிதி ஷெட்டி நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இதில் விக்ரம் பலவித கெட்டப்களில் வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார்.

விக்ரமின் 60 வது படம்
இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட இருந்தது. இதற்காக படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. லாக்டவுன் காரணமாகத் திரும்பி விட்டது. இந்நிலையில் நடிகர் விக்ரம் அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது விக்ரமின் 60 வது படம் என்று கூறப்படுகிறது.

ஜகமே தந்திரம்
தற்போது தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கி உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம். இருமுகன் படப்பிடிப்பின்போது கார்த்திக் சுப்புராஜ் கதை சொன்னதாகவும் அதை விக்ரம் ஓகே சொன்னதாகவும் அந்தக் கதையை இப்போது படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

கேங்ஸ்டர் படம்
இந்தப் படத்தையும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இது ஜெமினி, பீமா போன்ற படங்களை போல கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது பொன்னியில் செல்வன் படத்திலும் நடித்துவரும் விக்ரம், இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











