’ரெட்ரோ’ கார்த்திக் சுப்புராஜுக்கு ஹேப்பி பர்த்டே.. பெருசு தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி சொத்து இருக்கா?

சென்னை: நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பல சூப்பரான குறும்படங்களை இயக்கி ரசிகர்களையும் பிரபலங்களையும் கவர்ந்த கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே வித்தியாசமாக கொடுத்து ரசிகர்களை மிரள வைத்த கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதிக்கும் மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவில் தூக்கிக் கொடுத்தார்.

பீட்சா படத்தின் வெற்றியை தொடர்ந்து சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாகவும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வரிசையில் கார்த்திக் சுப்புராஜுக்கு நிரந்தர இடத்தையும் பெற்றுத் தந்தது.

Karthik Subbaraj turns 42 years old today here we look about his net worth and salary details

படங்களை இயக்குவதைத் தாண்டி ஸ்டோன் பெஞ்ச் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி நல்ல நல்ல படங்களை தயாரித்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். அவரது தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான பெருசு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ரெட்ரோ இயக்குநரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம் வாங்க..

கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள்: மதுரையில் 1983 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி பிறந்தவர் கார்த்திக் சுப்புராஜ். தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த கார்த்திக் சுப்புராஜ் ஒரு கட்டத்துக்கு மேல் தனக்கு இன்ஜினியரிங் செட் ஆகாது சினிமா தான் என்கிற முடிவுக்கு வந்து குறும்படங்களை இயக்கி மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார். சூர்யாவை வைத்து அவர் இயக்கி உள்ள ரெட்ரோ படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்திக் சுப்புராஜின் பிறந்த நாளை முன்னிட்டு ரெட்ரோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரெட்ரோ செகண்ட் சிங்கள் வருமா?: கண்ணாடிப் பூவே முதல் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது சிங்கிளை படக்குழு வெளியிடுவார்களா? என்றும் படத்தின் டிரைலர் எப்போது வரும் என்கிற கேள்விகளையும் சூர்யா ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். வரும் மே ஒன்றாம் தேதி சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

பெருசு பெரிய வெற்றி: கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அவியல், மேயாத மான், கள்ளச்சிரிப்பு, பெண்குயின், ட்ரிப்பிள்ஸ், பூமிகா, பஃபூன் உள்ளிட்ட படங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், கடந்த வாரம் வைபவ் மற்றும் சுனில் ரெட்டி நடிப்பில் வெளியான பெருசு திரைப்படம் ரசிகர்களை தியேட்டர்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வெற்றிநடை போட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான படங்ளில் பெருசு திரைப்படம் மட்டுமே போதிய வசூல் வேட்டையையும் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய படங்கள்: பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ என முன்னணி நடிகர்களை வைத்து பல பெரிய படங்களை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். வித்தியாசமான கதைகளையும் நடிகர்களிடமிருந்து எக்ஸ்ட்ராடினரியான நடிப்பையும் கொண்டு வந்து நிறுத்துவதில் கெட்டிக்காரர். சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படங்கள் கிடைக்காத நிலையில், அந்தக் குறையை ரெட்ரோ படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் போக்குவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சொத்து மதிப்பு: 42 வயதாகும் கார்த்திக் சுப்புராஜ் படங்களை இயக்குவது மற்றும் தயாரிப்பது என பல வருடங்களாக சினிமாவில் பெரிதாக சம்பாதித்து வருகிறார். ஒட்டுமொத்தமாக 20 முதல் 25 கோடி வரை அவரது சொத்து மதிப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு படத்துக்கு குறைந்தபட்சம் 5 முதல் 10 கோடி ரூபாய் அளவுக்கு கார்த்திக் சுப்புராஜ் சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர்.

FAQs
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் பெயர் என்ன?

ரெட்ரோ

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X