'நீங்க எங்களுக்கு முக்கியம் தலைவா..' ரஜினியின் அதிரடி முடிவு.. கார்த்திக் சுப்புராஜ் டச்சிங் ட்வீட்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று கூறியதை அடுத்து பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து #Rajinikanth என்ற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
இந்த ஹேஷ்டேக்கில் ரஜினி ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி ஆரம்பிப்பது பற்றி அறிவிப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக, ஐதராபாத் சென்றார். அங்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

ரத்த அழுத்தம்
இந்நிலையில் அவருடைய ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர் பின்னர் சென்னை திரும்பினார். இந்நிலையில், அவர் தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று இன்று தெரிவித்துள்ளார்.

ஏற்பட்ட வலி
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 'அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். அதற்காக என்னை மன்னியுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ்
இந்நிலையில் அவர் முடிவுக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துகளைத் சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தை, பேட்ட படத்தில் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா என்று தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
தகுதியற்றவர்கள்
இதுபற்றி அவர், தலைவா மோசமாக உணரவேண்டாம்.. உங்களை போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா. உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். எப்போதும் உங்களை நேசிக்கிறோம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











