twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    30 ஆண்டுகள்.. ஒரு தாயின் வலி.. பேரறிவாளனை ரிலீஸ் செய்யுங்க.. கார்த்திக் சுப்புராஜ் ஆதங்கம்!

    |

    சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை பெற்று வருகின்றனர்.

    Recommended Video

    பேரறிவாளனை ரிலீஸ் செய்யுங்க.. கார்த்திக் சுப்புராஜ் ஆதங்கம்!

    பல காலமாக, அவர்களை விடுதலை செய்ய பல்வேறு அமைப்புகள் தமிழக முதல்வர் முதல் ஜனாதிபதி வரை கோரிக்கைகள் வைத்து வருகின்றன.

    பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், கடந்த 30 ஆண்டுகளாக தனது மகனின் விடுதலையை காண போராடி வருகிறார்.

    விசாரிச்சுட்டு காலை அனுப்பிடறோம்னு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வெடி குண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஜூன் 11ம் தேதி இரவு 10.30 மணிக்கு, போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், "விசாரிச்சுட்டு காலை அனுப்பிடறோம்னு கூட்டிட்டு போனாங்க, பின்னர் 8 நாள் சட்ட விரோதமா வச்சிருந்துட்டு; வேப்பேரியில சுத்திவளைச்சு பிடிச்சதா கதை சொன்னாங்க. அங்க ஆரம்பிச்ச அநீதி இன்னும் முடியல. விடியல!" என உருக்கமாக அற்புதம்மாள் தற்போது ட்வீட் செய்திருக்கிறார்.

    ஒரு தாயின் போராட்டம்

    ஒரு தாயின் போராட்டம்

    தனது மகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அற்புதம்மாள் பல்வேறு போராட்டங்களையும், கருணை மனுக்களையும் கொடுத்து வருகிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரே அவர்களை மன்னித்த நிலையிலும், சட்டத்தின் பிடியில் இருந்து அவர்களை மீட்க இதுவரை வழி கிடைக்கவில்லை.

    கார்த்திக் சுப்புராஜ் ஆதங்கம்

    கார்த்திக் சுப்புராஜ் ஆதங்கம்

    பீட்சா, ஜிகர்தண்டா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில், #StandwithArputhamAmmal என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, 30 ஆண்டுகளாக தனது மகனை மீட்க அந்த அம்மா மிகவும் போராடி வருகிறார். செய்யாத குற்றத்திற்காக, இத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதே அதிகம் இப்போதாவது அவர்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    செய்யாத குற்றமா?

    செய்யாத குற்றமா?

    கார்த்திக் சுப்புராஜின் டிவீட்டை பார்த்த பலரும், 7 தமிழர்களின் விடுதலையை ஆதரித்தும், எதிர்த்தும் பல கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். "செய்யாத குற்றத்திற்காக" (Crime he didn't commit...) என கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டதற்கு பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அது உங்களுக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

    சில்லுக்கருப்பட்டி இயக்குநர்

    சில்லுக்கருப்பட்டி இயக்குநர்

    அற்புதம்மாள் இன்று பதிவிட்டுள்ள டிவீட்டை பார்த்த சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலீதா ஷமீம், அந்த பதிவுக்கு லைக் போட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை எப்பொது சாத்தியம் என தெரியாத நிலையில், தற்போது பலரும் #StandwithArputhamAmmal என்ற ஹாஷ்டேக்கிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    It's 30 YEARS since Perarivalan was taken to Jail for a Crime he didn't commit... 30 years of a mother's struggle for Justice still unanswered... It's high time he is released.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X