நவாசுத்தீன் சித்திக்கியை வரவேற்ற கார்த்திக் சுப்புராஜ்
நவாசுத்தீன் சித்திக்கியை கார்த்திக் சுப்புராஜ் வரவேற்றுள்ளார்
சென்னை: பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக்கியை வரவேற்றுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சிம்லா டார்ஜிலிங்கில் முடிந்து சென்னை பின்னி மில்லில் துவங்கியுள்ளது.

இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக்கி நடிக்கிறார். அவருடைய பகுதி இப்போது படமாக்கப்படுகிறது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள நவாசுத்தீன் சித்திக்கி, என்னுடைய முதல் தமிழ்படமான தலைவர் 165க்காக ஒத்திகை செய்து கொண்டிருக்கிறேன். சூப்பர்ஸ்டாருடன் பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
அதற்கு பதில் செய்துள்ள கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமா தங்களை அன்புடன் வரவேற்கிறது. நாங்களும் உங்களுடன் பணியாற்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நவாசுத்தீன் சித்திக்கி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











