ரஜினிக்கூட பேட்ட படத்துல நடிச்ச இவங்கள கவனிச்சீங்களா.. திடீரென வெளியாகி வைரலாகும் போட்டோ!
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மனைவி நடிகர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். பீஸா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வெளியான படம் பேட்ட. இந்தப் படத்தில் திரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், மாளவிகா மோகனன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கவனிக்கவில்லை
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மனைவி சத்ய பிரேமா நடித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சத்யா பிரேமா ஒரு சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரத்தில் நடித்ததை பலரும் கவனிக்கவில்லை.

ஸ்கிரீன் ஷாட்
ஆனால் தற்போது இந்த விஷயம் வெளியே வந்திருக்கிறது.
சத்ய பிரேமா நடித்திருப்பதை சில நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர், மேலும் படத்தின் ஸ்கிரீன் ஷாட்டை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

கடிதம் கொடுப்பார்
சத்யா பிரேமா ரஜினிகாந்துடன் ஒரு காட்சியில் நடித்துள்ளார். படத்தில் ரஜினிகாந்த் வார்டனாக பொறுப்பேற்க வரும்போது சத்ய பிரேமா அவரிடம் ஒரு கடிதத்தை ஒப்படைப்பதாக நடித்திருக்கிறார்.

ஜகமே தந்திரம்
கார்த்திக் சுப்புராஜின் முதல் படமான பீஸா படத்தின் ஹீரோயின் தன்னுடைய கேரக்டரை கொண்டிருந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் சத்ய பிரேமா. கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷை வைத்து இயக்கியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











