Thalapathy 69 - தளபதி 69 பட இயக்குநர் இவர் தானா?.. அந்த தயாரிப்பு நிறுவனம் போடும் கணக்கு நடக்குமா?

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் இதுவரை அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், தளபதி 69 படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க முயற்சி செய்து வருவதாகவும் அந்த பிரபல இயக்குநர் தான் இயக்கப் போகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கோலிவுட்டின் வசூல் மன்னனாக வலம் வரும் நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு பிறகு சினிமாவுக்கு பிரேக் விட்டு விட்டு முழு நேரமும் அரசியலில் செலவிட போவதாக கூறப்பட்டது. அதன் காரணமாகவே அடுத்த பட அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகாமல் இருந்து வருகிறது என்றும் கூறுகின்றனர்.

 Karthik Subbaraj will direct Thalapathy 69?

ஆர்ஆர்ஆர் பட நிறுவனம்: நடிகர் விஜய் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்த நிலையில், அடுத்து ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி நிறுவனம் விஜய் கால்ஷீட்டுக்காக முயற்சி செய்து வருவதாகவும் தெலுங்கு இயக்குநர் ஒருவர் படத்தை இயக்கப் போவதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐசரி கணேஷ் முயற்சி: தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் ஐசரி கணேஷ் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக எப்படியாவது விஜய்யின் கால்ஷீட்டை வாங்கி ஒரு படம் பண்ணிடலாம் என்கிற முயற்சியில் ஒருபக்கம் அவரும் தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர். மேலும், இயக்குநர் ஒருவரையும் விஜய்க்காக அவர் லாக் செய்து வைத்திருப்பாதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தளபதி 69 இயக்குநர்: ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளார். இந்நிலையில், அடுத்து நடிகர் விஜய்யை வைத்து தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கப் போகிறார் என்றும் விஜய்க்காக செம ஸ்க்ரிப்ட் ஒன்றையும் தயார் செய்து வைத்திருக்கிறார் எனக் கூறுகின்றனர். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாகவோ விஜய் தரப்பில் இருந்தோ தளபதி 69 படத்தின் இயக்குநர் குறித்த எந்தவொரு தகவலும் உறுதியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X