ரஜினி நடிக்க வேண்டிய கதையில் சூர்யாவா?.. ரெட்ரோ கன்ஃபார்ம் ஹிட்தான் போல.. செம ஜாக்பாட்
சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. திட்டமிட்டு அந்தப் படத்தை தோற்கடித்துவிட்டார்கள் என்று சூர்யா தரப்பு கூறினாலும்; படத்தில் ஒன்றுமே இல்லை என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்திருக்கிறார். மே ஒன்றாம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
சிவா இயக்கத்தில் உருவான கங்குவா திரைப்படத்தை சூர்யாவும், அவரது ரசிகர்களும் ரொம்பவே நம்பியிருந்தார்கள். மொத்தம் இரண்டு பாகங்கள், 30க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் என பட அறிவிப்பு வெளியான சமயத்திலேயே ஓவர் ஹைப் ஏற்றப்பட்டது. அது போதாதென்று படத்தின் ப்ரோமோஷனில் பேசிய தயாரிபாளர் ஞானவேல் ராஜா, கதாநாயகன் சூர்யா உள்ளிட்டோர் எக்கச்சக்கமாக பில்டப்பை கொடுத்தார்கள். ஆனால் எதிர்பார்த்தபடியும், அவர்கள் ஏற்றிய ஹைப் அளவுக்கும் படம் இல்லை. இதன் காரணமாக படுதோல்வியை சந்தித்தது.
உடனடி ஹிட் தேவை: இதன் காரணமாக சூர்யாவுக்கு இப்போது உடனடியாக ஒரு ஹிட் தேவைப்படுகிறது. திரையரங்குகளில் வெளியாகி சூர்யா படம் ஹிட்டாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்படிப்பட்ட நிலைமையில்தான் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்திருக்கிறார் அவர். ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைப் செய்த கனிமா: படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிளான் கனிமா பாடல் தமிழ்நாட்டில் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் பூஜா ஹெக்டே போடும் ஸ்டெப்பை வைத்து பலரும் ரீல்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ட்ரெய்லருக்குக்கூட கலவையான விமர்சனம்தான் கிடைத்தது. அதேசமயம் ட்ரெய்லர் சுமாராக இருந்தால் என்ன ரெட்ரோ படம் சம்பவம் செய்தால் போதும் என்பது சூர்யா ரசிகர்களின் விருப்பம்.
கண்டிப்பாக பந்தயம் அடிக்கும்: கண்டிப்பாக இந்தப் படம் பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது. ஏனெனில் தற்கால தலைமுறை இயக்குநர்களில் கார்த்திக் சுப்புப்ராஜ் கொஞ்சம் வித்தியாசமானவர். அதிலும் கேங்ஸ்டர் கதையை அவர் கையில் எடுத்தால் கண்டிப்பாக அது ஹிட்தான் என்ற ரெக்கார்டும் இருக்கிறது. உதாரணமாக ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களை சொல்லலாம். எனவே நீண்ட வருடங்களாக ஒரு தியேட்டரிக்கல் ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் சூர்யாவை காப்பாற்ற வந்த தேவதூதன் கார்த்திக் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் பறந்துவருகின்றன.
கார்த்திக் சுப்புராஜ் பேட்டி: படம் வெளியாக இன்னும் ஒருவாரம் மட்டுமே இருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்ற்னா. இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் அளித்திருந்த ஒரு பேட்டியில், "ரெட்ரோ படத்தின் கதையை நான் முதலில் ரஜினியை மனதில் வைத்துதான் எழுதினேன். அப்படி எழுதும்போது இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் கதையாகத்தான் இருந்தது. பிறகு சூர்யாவிடம் இந்தக் கதையை சொல்லும் வாய்ப்பு கிடைத்தபோது அந்த ஆக்ஷன் கதையை கொஞ்சம் மாற்றி காதல் கதையாக சொன்னேன்" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் ரஜினியை மனதில் வைத்து கார்த்திக் எழுதியிருப்பதால் நிச்சயம் பல மாஸ் ப்ளஸ் க்ளாஸ் மொமண்ட்ஸ் இருக்கும். எனவே இப்படம் சூர்யாவுக்கு ஜாக்பாட்தான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











