யு/ஏ சான்றிதழுடன் பரிமாறத் தயார் நிலையில் ‘ஜிகிர்தண்டா’...
சென்னை: சித்தார்த், லட்சுமிமேனன் நடிப்பில் தயாரான 'ஜிகிர்தண்டா' படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.
விஜய் சேதுபதி நடித்த பீட்சா படம் மூலம் பிரபலமடைந்த கார்த்திக் சுப்புராஜின் புதிய படம் தான் ஜிகிர்தண்டா. இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்ட நிலையில் விரைவில் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, 'யு/ஏ சென்சார் சான்றிதழுடன் பரிமாறத் தயாராக உள்ளது ஜிகிர்தண்டா. விரைவில் ஜிகிர்தண்டா ரிலீஸ் செய்யப்படும். எனவே நான் எனது அடுத்தப்பட வேலைகளைத் தொடங்கி விட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆடுகளம் படத் தயாரிப்பாளர் கதிரேசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இசை சந்தோஷ் நாராயணன்.
இப்படம் வரும் 23ம் தேதி ரிலீசாகும் என முன்பு தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், தற்போது அதே தேதியில் ரஜினியின் கோச்சடையான் ரிலீசாவதால், இப்படம் முன்கூட்டியே ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.


Click it and Unblock the Notifications












