Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 2 hrs ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Automobiles
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேட்ட படத்தின் உண்மையான வசூல் என்ன?... கார்த்திக் சுப்புராஜ் பேட்டி!

சென்னை: பேட்ட படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கலந்துகொண்டார்.
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துடன் ரிலீசான அஜித்தின் விஸ்வாசம் படமும் தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடுகிறது.
இதனால் இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனமும் மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனால் எந்த படம் அதிக வசூல் செய்துள்ளது என்ற விவரம் சரியாக தெரியவில்லை. பேட்ட திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியனும், விஸ்வாசம் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தெரிவித்தன.

வடிக்கட்டிய பொய்
ஆனால் இது வடிக்கட்டிய பொய் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் யார் சொல்வது பொய், யார் சொல்வது மெய் என்பது புரியவில்லை. இதனிடையே, சினிமா டிராக்கர்கள் என்ற பெயரில் டிவிட்டரில் இயங்கும் சிலர் தங்கள் இஷ்டப்படி வசூல் நிலவரங்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு படத்தையும் உயர்த்தியும், ஒரு படத்தை தாழ்த்தியும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வெற்றி கொண்டாட்டம்
இந்நிலையில் பேட்ட படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

வசூல் என்ன?
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ் ‘பேட்ட படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் வெளியாகி 2 வாரங்கள் ஆன பின்பும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போல் உள்ளது. இன்று ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து கொண்டாடினேன். பேட்ட படத்தின் வசூல் குறித்து விநியோகிஸ்தர்கள் தான் கூற வேண்டும்' என்றார்.

வேறு யாருக்கு தெரியும்?
கார்த்திக் சுப்புராஜின் இந்த பதிலின் மூலம், ஒரு படத்தின் இயக்குனருக்கே அப்படத்தின் வசூல் நிலவரம் தெரியாதபோது, மற்றவர்களுக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுகிறது. எது எப்படி இருந்தாலும், இந்த மாதம் முழுவதும் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களை பற்றி தான் தமிழ்நாடே பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.