மகான் படத்தோட அடுத்த சிங்கிள்... சில மணிநேரங்கள் காத்திருங்கள் மக்களே!
சென்னை : நடிகர் சியான் விக்ரம், துருவ் விக்ரம் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மகான்.
இந்தப் படம் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி படத்தை பிரமோட் செய்யும் பணிகளில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மகான் படம்
நடிகர் விக்ரம் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வருகிறார். அவரது மகான் படத்தில் முதல் முறையாக தனது மகனுடன் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வரும் பிப்ரவரி 10ம் தேதி இந்தப் படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் -சிம்ரன் ஜோடி
படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக திரையில் நடித்து வந்தாலும் முதல் முறையாக இந்தப் படத்தில் விக்ரமின் ஜோடியாகியுள்ளார் நடிகை சிம்ரன்.

சிம்ஹா போஸ்டர்
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோரின் போஸ்டர்கள் மட்டுமே வெளியான நிலையில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சிம்ஹாவின் போஸ்டரையும் அவரது கேரக்டர் குறித்தும் படக்குழுவினர் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர்.

2வது பாடல் வெளியீடு
சந்தோஷ் நாராயணன் இசையில் முன்னதாக படத்தின் ஒரு பாடல் வெளியான நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

கேங்ஸ்டர் படம்
எவன்டா எனக்கு கஸ்டடி என்று துவங்கும் இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகவுள்ளது. படம் வழக்கமான கார்த்திக் சுப்புராஜ் படங்களை போலவே கேங்ஸ்டர் படமாக வெளியாகவுள்ளது. படத்தில் முதல்முறையாக விக்ரம் -துருவ் விக்ரம் மற்றும் விக்ரம் -சிம்ரன் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்
ஆயினும் கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படமான ஜகமே தந்திரம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் இந்தப் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஆயினும் அவரது படங்களுக்கு எப்போதுமே உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களை படத்தின் ரிலீசுக்காக காத்திருக்க செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











