“சீக்கிரமே வர்றோம்.. கொண்டாடலாம்”.. ‘பேட்ட’ குறித்து கார்த்திக் சுப்புராஜ் சொல்லும் சீக்ரெட்!

ரஜினியின் பேட்ட படத்தை இயக்குவது பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

சென்னை: தான் சினிமாவிற்கு வருவதற்கு மிக முக்கிய காரணமே நடிகர் ரஜினி தான் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு பேட்ட என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் மோஷன் போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது.

மிகவும் கலர்புல்லாக வெளியான இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொடர்ந்து பேட்ட டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்டது. பின்னர் சென்னையில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

ரஜினி ரசிகன்:

இந்நிலையில் ரஜினியை இயக்கும் அனுபவம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டிவிட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நான் சின்ன வயதில் இருந்து ரஜினியின் விசிறி.

கனவு நினைவானது:

கனவு நினைவானது:

அவரைப் பார்த்துதான் வளர்ந்தேன். நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் ரஜினிதான். அவரை வைத்து இயக்குவது என்னுடைய கனவு. அது நிறைவேறி இருக்கிறது.

சிறப்பு:

சிறப்பு:

இதன் படப்பிடிப்பு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னுடைய ஸ்டைலில் கலக்கி வருகிறார். பேட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் பார்க்கும் போது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

சீக்கிரம் வருகிறோம்:

சீக்கிரம் வருகிறோம்:

சீக்கிரமே படத்தை முடித்து, சீக்கிரமே தியேட்டருக்கு வருகிறோம். ரசிகர்கள் அனைவரும் ரஜினி படத்தை கொண்டாடுவோம்' என இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X