twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாவலை வைத்து படமெடுக்கும் திட்டத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் !

    |

    சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜூன் 18ம் தேதி வெளிவரவுள்ள படம் ஜகமே தந்திரம்.

    இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    ஒரு நிமிஷம் மீரா மிதுன்னு நெனச்சிட்டேம்.. ரைசாவின் லேட்டஸ்ட் போட்டோவை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!ஒரு நிமிஷம் மீரா மிதுன்னு நெனச்சிட்டேம்.. ரைசாவின் லேட்டஸ்ட் போட்டோவை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!

    மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் ஜூன் 18ம் தேதி நேரடியாக Netflix ல் வெளிவரவுள்ளது.

    லண்டன் தாதா

    லண்டன் தாதா

    ஜூன் 1ம் தேதி வெளியான இந்த படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. நிறைய ஆக்ஷன், சில இடங்களில் அரசியல் கலந்த ட்ரைலர் பல ரசிகர்களை கவர்ந்தது. ட்ரைலரில் தனுஷ் பேசும் வசனமான "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா" ட்ரெண்டிங் ஆனது.

    இயக்குனர் பேட்டி

    இயக்குனர் பேட்டி

    ட்ரைலர் வெளியான போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியில் புஜ்ஜி, நேத்து பாடல்கள் ப்ரோமோஷனுக்காக மட்டுமே. படத்தில் இடம்பெற்றிருக்காது எனவும் ரகிட்ட ரகிட்ட பாடல் மட்டுமே படத்தில் இடம்பெறும் என கூறி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

    தமிழ் ஈழம்

    தமிழ் ஈழம்

    ஜகமே தந்திரம் படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்களும் பேசப்பட்டிருக்கும் என கூறியுள்ளார். இது படத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. ஈழம் சார்ந்த அரசியல் பேசப்பட்டிருக்கும் என தெரிகிறது. அவரின் ஜிகர்தண்டா படத்திலும் ஈழம் சார்ந்த வசனம் இடம்பெற்றிருக்கும்.

    Recommended Video

    Jagame Thandhiram Trailer Biggest Hidden Details revealed | Dhanush, Aishwarya Lekshmi | NETFLIX
    காப்புரிமை வாங்கியுள்ளார்

    காப்புரிமை வாங்கியுள்ளார்

    அ. முத்துலிங்கம் எழுதிய கடவுள் தொடங்கிய இடம் நாவலின் காப்புரிமையை வாங்கியுள்ளதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அதனை வைத்து படம் அல்லது வெப் தொடர் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். இந்த நாவல் ஈழத்தவர்கள் படும் இன்னல்களை விவரிக்கும் நாவலாகும்.

    English summary
    Karthik Subburaj planned to make a film based on novel kadavul thodangiya idam wrote by a.muthulingam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X