ஜகம் சுகமடைந்ததும் ஜகமே தந்திரம் ரிலீஸ்.. புதிய போஸ்டரை வெளியிட்டு கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்..!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் இன்று வெளியாக இருந்தது ஆனால் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூட பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளி போனது. இதை பற்றி ஒரு ட்வீட் செய்து படத்தின் புது போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

Recommended Video

May Release Jagame Thandhiram | Mookuthi Amman | Dhanush | Nayanthara

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் தான் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷ், ஜஸ்வர்யா லஷ்மி, சஞ்சனா நடராஜன்,ஜேம்ஸ் காஸ்மோ, தீபக் பரமேஷ், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். படத்தை பிரபல தயாரிப்பாளரான சசிகாந்த் ஒய் நாட் ஸ்டூடியோஸின் கீழ் தயாரித்து உள்ளார் .

Karthik Subburaj released a Jagame Thandhiram new poster

படம் மே 1ம் தேதி வெளியாகும் என்று படப்பிடிப்பின் போது அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று அச்சத்தால் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றத்தால் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. இதனால் பல படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு மொத்தமாக தள்ளி போயுள்ளது.

இதை பற்றி தற்போது ட்வீட் செய்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இந்த வைரஸ் மட்டும் இல்லையெனில் இன்று தான் ஜகமே தந்திரம் படத்தின் முதல் காட்சி என்றும் ஜகம் சுகமடைந்ததும் ஜகமே தந்திரம், சரியானதை நோக்கி காத்திருக்கிறோம் ஜகம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின் திரையரங்குகளுக்கு படம் வரும் என்று நம்பிக்கையுடன் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் புது போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

Karthik Subburaj released a Jagame Thandhiram new poster

பயணடிக்கெட்டுகளை வைத்து தனுஷின் உருவத்தில் உருவாக்கியுள்ள போஸ்டர் ரசிகர்களை உண்மையிலே ஆச்சரிய பட வைத்துள்ளது. ஆனால் ஒரு சில டிக்கெட்டுகளை உற்று நோக்கும் போது லண்டன் என்கிற ஊரின் பெயர் அதிகமாக காண்பிக்க பட்டுள்ளது. படமும் லண்டனில் படமாக்கபட்டுள்ளதால் அதை தொடர்ப்பு படுத்தியிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

படத்தில் ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ லண்டன் டானாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போல பல புதிய விஷயங்கள் படத்தில் இருக்கிறது.

Karthik Subburaj released a Jagame Thandhiram new poster

நாம் அனைவரையும் தன் திறமைகளின் மூலம் ஆச்சரியபட வைத்த தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம் என்பதால் பட அறிவிப்பு ஒரு வருடத்திற்கு முன் வந்ததில் இருந்து படம் எப்போது வரும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாய் ஏற்பட்டது. தற்போதும் ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு அப்படியே இருக்கிறது. இதனால் தற்போது வெளியிடபட்டுள்ள போஸ்டரை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது வரும் என்ற ஏக்கத்தை பகிர்ந்து பல விஷயங்களை பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X