மகானின் அடுத்த பாடலும் ரிலீஸ்... என்ன இப்படி பிரமோஷன் கொடுக்கறாங்க
சென்னை : நடிகர் சியான் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான்.
இந்தப் படம் வரும் 10ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளை தற்போது படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.

மகான் படம்
நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான். இந்தப் படத்தை தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். அவரது முந்தைய படம் போலவே இந்தப் படமும் தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட உள்ளது.

அமேசான் பிரைமில் வெளியீடு
அமேசான் பிரைமில் இந்தப் படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் விக்ரமின் மகனும் சிம்ரனும் முதல்முறையாக சிம்ரனுடன் இணைந்துள்ளனர். இது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடிகர் துருவ் விக்ரம்
ஆதித்ய வர்மா மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள துருவ் விக்ரம் இரண்டாவது படத்திலேயே தனது தந்தையுடன் இணைந்துள்ளார். அதுவும் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் அவர் இணைந்துள்ளார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சிறப்பான பிரமோஷன்
படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை படக்குழு முடுக்கி விட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

அடுத்தடுத்த போஸ்டர்கள்
படத்தில் நடித்துள்ள சிம்ரன், சிம்ஹா உள்ளிட்டவர்களின் கேரக்டர்களுடன் கூடிய போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தற்போது படத்தின் ரிச் ரிச் பாடல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கேங்ஸ்டர் படம்
எப்போதும் போல இந்த முறையும் கேங்ஸ்டர் கதைக்களத்தையே தனது படத்திற்கான கருவாக எடுத்துக் கொண்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். விக்ரம் இந்தப் படத்தில் மிரட்டலான தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான ட்ரெயிலர் இதை உணர்த்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பாடலும் சிறப்பாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











