மாப்பிள்ளை விசாகனுக்காக கதை கேட்ட ரஜினி.. ஓகே சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.. அப்போ தனுஷ்?
இளைய மருமகன் விசாகனுக்காக கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டுள்ளாராம் ரஜினி.
Recommended Video
சென்னை: தனது மருமகன் விசாகனுக்காக கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு படம் இயக்கும்படி ரஜினி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீசானது. அப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், மீண்டும் ரஜினியை வைத்து இதே போன்று ஸ்டைலிஷான படம் ஒன்றைத் தர வேண்டும் என ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினி, தன் இளைய மருமகன் விசாகனுக்காக கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு படம் இயக்கும்படி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலதிபரான விசாகன், ஏற்கனவே வஞ்சகர் உலகம் படத்தில் நடித்தவர். தொடர்ந்து சினிமாவில் நடிக்க அவர் ஆர்வமாக இருப்பதால், அவருக்காக கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி பேசியதாக தெரிகிறது.
ரஜினியே கேட்பதால் இல்லையென மறுக்க முடியுமா? கார்த்திக் சுப்புராஜும் இதற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அவருக்கான கதையைத் தயார் செய்வார் எனத் தெரிகிறது.
ஏற்கனவே பேட்ட பட வெற்றியைத் தொடர்ந்து, ரஜினியின் மூத்த மருமகனும், நடிகருமான தனுஷை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இப்போது அந்தப் பட்டியலில் ரஜினியின் இளைய மருமகனும் சேர்ந்து விட்டார். ஆனால், ரஜினியின் இந்த இரண்டு மருமகன்களில் யாரை முதலில் இயக்கப் போகிறார் கார்த்திக் சுப்புராஜ் என்பது தான் ரசிகர்களிடையே பெரும் ஆர்வமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











