கொரோனா தடுப்பூசி...இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்ட கார்த்திக்
சென்னை : 80 களிலும், 90 களிலும் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் கார்த்திக். தனது யதார்த்தமான, சிறப்பான நடிப்பால் நவரச நாயகன் என அழைக்கப்படுபவர். பலரின் மனம் கவர்ந்த ஹீரோவாகவும் இருந்தவர் கார்த்திக்.
மார்ச் துவக்கத்தில் கடும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட கார்த்திக், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது.

முதல்கட்டமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், கார்த்திக்கிற்கு கொரோனா இல்லை என தெரிய வந்தது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு, கார்த்திக் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது.
இந்நிலையில் இன்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை, கார்த்திக் போட்டுக் கொண்டார். கார்த்திக் தற்போது பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இது அந்துதன் என்ற இந்தி படத்தின் ரீமேக் ஆகும்.
கார்த்திக் மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்தகன் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதே படத்தில் நடித்து வரும் நடிகை ஊர்வசி, முதல் டோசை படப்பிடிப்பு தளத்திலேயே போட்டுக் கொண்டார்.
பாதுகாப்பாக படப்பிடிப்பை தொடர வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என படத்தின் டைரக்டர் தியாகராஜன் தான் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











