இனி நான் "தேவர் மகன்"... சசிக்கு செக் வைக்கும் கார்த்திக் தேவர் சமுதாய மக்களுக்காக இனி நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறேன். தேவர் சமுதாயத்தினர் இனிமேல் என்னைஎப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.நவரச நடிகர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கார்த்திக், ஒரு காலத்தில் தமிழகத்தையே தனது ஹாண்ட்சம் லுக் மற்றும்நடிப்பால் கட்டிப் போட்டிருந்தார். இன்றும் கூட அவரது இடத்தை நிரப்ப தமிழ் சினிமாவில் ஆள் இல்லை தான்.ஆனால், பின்னர் போதைக்கும் அதைவிட மட்டமான சமாச்சாரங்களுக்கும் அடிமையானார். ஹோட்டல்களில் நிரந்தரமாக ரூம் போட்டுதண்ணி அடிக்கும் நிலைக்குப் போனார். இதனால் வாய்ப்புகள் குறைந்து போய் விடவே அதிமுகவுக்குப் போனார்.அவருக்காக நடிகர்கள் ராதாரவியும், எஸ்.எஸ்.சந்திரனும் ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தார்கள்.ஆனால், சினிமா சக்தியை வைத்து அரசியல் நடத்தி வரும் ஜெயலலிதா, சினிமாவில் இன்னும் கொஞ்சம் இடம் மிச்சம் வைத்துள்ளகார்த்திக்கை அதிமுகவில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை. (எஸ்வி சேகர், தாமு போன்ற முழுசாய் பீஸ் போன ஆட்கள் சேர்க்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது)அதே போல இச் சமூக மக்களின் ஒரே தலைமையாக இருக்க ஆசைப்படும் சசிகலா தலைமையிலான மன்னார்குடி வகையறாவும், கார்த்திக்அதிமுகவுக்கு வருவதை விரும்பவில்லை. சசிகலாவுக்கு பிடிக்காததை ஜெயலலிதா செய்ய மாட்டாரே. அதனால், அதிமுகவில் அவருக்குநோ-எண்ட்ரி சிக்னல் தரப்பட்டது.இதையடுத்து யாருமே எதிர்பார்க்காத வகையில், தடாலடியாக, தான் சார்ந்த தேவர் சமுதாயத்தினரை திரட்டி புதிய அமைப்பைத்தொடங்கினார் கார்த்திக். சரணாலயம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம் சமூகப் பணி செய்யப் போவதாககார்த்திக் கூறினாலும், தேவர் சமுதாயத்தினரை ஒன்று திரட்டி, அரசியலில் குதிக்கும் திட்டத்துடன் இவர் இருப்பதே உண்மை.சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த இவரது சரணாலயம் அமைப்பின் கூடிய கூட்டம் கார்த்திக்கை திக்குமுக்காட வைத்துவிட்டது. இதனால்மனிதர் இன்னும் வேகமாக காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.இப்போது லயன்ஸ் கிளப்புடன் சேர்ந்து தமிழகம் முழுவதிலும், குறிப்பாக முக்குலத்தோர் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில், பல்வேறுநற்பணிகளை செய்யப் போகிறதாம் சரணாலயம் அமைப்பு.தனது அமைப்பின் நோக்கம் குறித்து கார்த்திக் கூறுகையில்,இது முழுக்க முழுக்க ஒரு தொண்டு அமைப்பு. இதன் நோக்கம், ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் உதவுவதே, அரசியல் குறிக்கோள்எதுவும் இதில் இல்லை. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போதைக்கு என்னிடம் இல்லை.இனிமேல் எனது தேவர் சமுதாய மக்களுக்காக நான் வாழப் போகிறேன். எனது வாழ்க்கையை அவர்களுக்கு அர்ப்பணித்து விட்டேன்.அவர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.அரசுக்கும், சட்டம் ஒழுங்குக்கும் இந்த அமைப்பினரால், எனது ரசிகர்களால், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் எந்த பாதிப்பும் விடக்கூடாது.என் தந்தை முத்துராமன் மீது வைத்தள்ள பாசத்தை இப்போது என் மீது காட்டி வருகிறார்கள் தேவர் சமுதாயத்தினர். இது சந்தோஷமாகஇருக்கிறது. என் மீது இவ்வளவு மரியாதை, பிரியம் வைத்துள்ளதை நான் இத்தனை காலமாக உணராமல் இருந்து விட்டேனே. எனக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் இல்லை. இருந்தும் கூட என் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள்.அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சரணாலயம் அமைப்பைத் தொடங்கியுள்ளேன்.எனக்குத் தொழில் இருக்கிறது. அது எனது உயிர். அதேபோல, என்னை நம்பும், என்னைப் பின்பற்றும் மக்களும் எனது உயிர். இரண்டுஉயிரையும் நான் மதிக்கிறேன், கைவிட மாட்டேன் என்றார் கார்த்திக்.அதிமுகவின் மிகப் பெரிய பலமே முக்குலத்தோர் வாக்குகள் தான். அதில் ஓட்டை போட முயலும் கார்த்திக் மீது கடும் கோபத்தில்இருக்கிறது போயஸ் கார்டன் ஏரியா.

By Staff

தேவர் சமுதாய மக்களுக்காக இனி நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறேன். தேவர் சமுதாயத்தினர் இனிமேல் என்னைஎப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.

நவரச நடிகர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கார்த்திக், ஒரு காலத்தில் தமிழகத்தையே தனது ஹாண்ட்சம் லுக் மற்றும்நடிப்பால் கட்டிப் போட்டிருந்தார். இன்றும் கூட அவரது இடத்தை நிரப்ப தமிழ் சினிமாவில் ஆள் இல்லை தான்.

ஆனால், பின்னர் போதைக்கும் அதைவிட மட்டமான சமாச்சாரங்களுக்கும் அடிமையானார். ஹோட்டல்களில் நிரந்தரமாக ரூம் போட்டுதண்ணி அடிக்கும் நிலைக்குப் போனார். இதனால் வாய்ப்புகள் குறைந்து போய் விடவே அதிமுகவுக்குப் போனார்.

அவருக்காக நடிகர்கள் ராதாரவியும், எஸ்.எஸ்.சந்திரனும் ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தார்கள்.

ஆனால், சினிமா சக்தியை வைத்து அரசியல் நடத்தி வரும் ஜெயலலிதா, சினிமாவில் இன்னும் கொஞ்சம் இடம் மிச்சம் வைத்துள்ளகார்த்திக்கை அதிமுகவில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை. (எஸ்வி சேகர், தாமு போன்ற முழுசாய் பீஸ் போன ஆட்கள் சேர்க்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது)

அதே போல இச் சமூக மக்களின் ஒரே தலைமையாக இருக்க ஆசைப்படும் சசிகலா தலைமையிலான மன்னார்குடி வகையறாவும், கார்த்திக்அதிமுகவுக்கு வருவதை விரும்பவில்லை. சசிகலாவுக்கு பிடிக்காததை ஜெயலலிதா செய்ய மாட்டாரே. அதனால், அதிமுகவில் அவருக்குநோ-எண்ட்ரி சிக்னல் தரப்பட்டது.

இதையடுத்து யாருமே எதிர்பார்க்காத வகையில், தடாலடியாக, தான் சார்ந்த தேவர் சமுதாயத்தினரை திரட்டி புதிய அமைப்பைத்தொடங்கினார் கார்த்திக். சரணாலயம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம் சமூகப் பணி செய்யப் போவதாககார்த்திக் கூறினாலும், தேவர் சமுதாயத்தினரை ஒன்று திரட்டி, அரசியலில் குதிக்கும் திட்டத்துடன் இவர் இருப்பதே உண்மை.

சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த இவரது சரணாலயம் அமைப்பின் கூடிய கூட்டம் கார்த்திக்கை திக்குமுக்காட வைத்துவிட்டது. இதனால்மனிதர் இன்னும் வேகமாக காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.

இப்போது லயன்ஸ் கிளப்புடன் சேர்ந்து தமிழகம் முழுவதிலும், குறிப்பாக முக்குலத்தோர் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில், பல்வேறுநற்பணிகளை செய்யப் போகிறதாம் சரணாலயம் அமைப்பு.

தனது அமைப்பின் நோக்கம் குறித்து கார்த்திக் கூறுகையில்,

இது முழுக்க முழுக்க ஒரு தொண்டு அமைப்பு. இதன் நோக்கம், ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் உதவுவதே, அரசியல் குறிக்கோள்எதுவும் இதில் இல்லை. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போதைக்கு என்னிடம் இல்லை.

இனிமேல் எனது தேவர் சமுதாய மக்களுக்காக நான் வாழப் போகிறேன். எனது வாழ்க்கையை அவர்களுக்கு அர்ப்பணித்து விட்டேன்.அவர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசுக்கும், சட்டம் ஒழுங்குக்கும் இந்த அமைப்பினரால், எனது ரசிகர்களால், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் எந்த பாதிப்பும் விடக்கூடாது.

என் தந்தை முத்துராமன் மீது வைத்தள்ள பாசத்தை இப்போது என் மீது காட்டி வருகிறார்கள் தேவர் சமுதாயத்தினர். இது சந்தோஷமாகஇருக்கிறது. என் மீது இவ்வளவு மரியாதை, பிரியம் வைத்துள்ளதை நான் இத்தனை காலமாக உணராமல் இருந்து விட்டேனே.

எனக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் இல்லை. இருந்தும் கூட என் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சரணாலயம் அமைப்பைத் தொடங்கியுள்ளேன்.

எனக்குத் தொழில் இருக்கிறது. அது எனது உயிர். அதேபோல, என்னை நம்பும், என்னைப் பின்பற்றும் மக்களும் எனது உயிர். இரண்டுஉயிரையும் நான் மதிக்கிறேன், கைவிட மாட்டேன் என்றார் கார்த்திக்.

அதிமுகவின் மிகப் பெரிய பலமே முக்குலத்தோர் வாக்குகள் தான். அதில் ஓட்டை போட முயலும் கார்த்திக் மீது கடும் கோபத்தில்இருக்கிறது போயஸ் கார்டன் ஏரியா.

Read more about: karthik irritates sasikala
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X