»   »  விஜயகாந்த்துடன் சேர மாட்டேன்- கார்த்திக் விஜயகாந்த் கட்சியில் சேரும் எண்ணம் இல்லை. நானே கட்சி ஆரம்பிப்பது குறித்து இப்போது எதுவும்கூறுவதற்கில்லை என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் முக்கியமானவராக ஒரு காலத்தில் கலக்கியவர் கார்த்திக். பிறகுபல்வேறு சர்ச்சைகள் பிளஸ் பிரச்சினைகளில் சிக்கி படங்கள் எதுவும் இல்லாமல் சைலன்ட் ஆகி விட்டார்கார்த்திக்.இப்போது அவரது நடிப்பைத் தேடி ஒரு படம் வந்துள்ளது. புத்தம் புது மனிதராக இந்தப் படத்தில் நடிக்கப்போவதாக கார்த்திக் கூறியுள்ளார். செய்தியாளர்களை அழைத்து கார்த்திக் பேசுகையில் பல விஷயங்களைவிலாவரியாக பேசினார்.கார்த்திக்கின் பேட்டியிலிருந்து சில துளிகள்..150 படங்கள் நடித்து விட்டேன். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக நான் பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். நான் நடித்த சில படங்கள் வராததற்கும், சில படங்கள் ஓடாததற்கும் நான் தான் காரணம் என்றுகூறினார்கள். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை.என்னால் எந்தப் படமும் தாமதமானதில்லை, ஓடாமலும் இருந்ததில்லை. என்னைக் குறை கூறுபவர்களுக்குஅதனால் லாபம் ஏற்படும் என்றால் அதைத் தடுக்க நான் விரும்பவில்லை. என்னைத் தேடி சிலர் வருகிறார்கள்.அவர்களுக்காக நான் நடிக்கிறேன்.அதிமுகவில் நான் சேர விரும்பினேன். ஆனால் அது கை கூடவில்லை. ஏன் அது நடக்கவில்லை என்பது குறித்துஎதுவும் கூற நான் விரும்பவில்லை. விஜயகாந்தை நடிகர் சங்கத் தேர்தலின் போது சந்தித்துப் பேசினேன். அவரது கட்சியில் சேரும் எண்ணத்தினால்அவரை சந்திக்கவில்லை. அப்படி ஒரு யோசனையும் என்னிடம் இல்லை.என் மீது இன்னமும் பிரியம் வைத்துள்ள, எனது தந்தை மீது பாசம் வைத்துள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்காகசரணாலயம் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளேன். அது அரசியல் கட்சியாக மாறுமா என்பதை இப்போதுகூறுவதற்கில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.எனது மகன் கெளதம் இப்போதைக்கு நடிக்க வரவில்லை. பள்ளிப் படிப்பில் தான் அவர் இருக்கிறார். கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு, அவர் விரும்பினால் நடிக்க வருவார்.எனது அடுத்த இலக்கு இயக்கம் தான். சில கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். அநேகமாக நவம்பரில்இந்தப் பணி தொடங்கும்.என்னைப் பொருத்தவரை நான் எதையுமே நுனி நாக்கில் பேசுவதில்லை. இதயத்தின் அடித்தளத்திலிருந்து தான்பேசுவேன். என் கேரியரில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்களிருந்து என்னைக் காப்பாற்றியது, எனது அப்பாவின்பெயரும், சில நல்ல படங்களும் தான்.இடையில் எனது தலை முடி கொட்டி விட்டது. அதற்கு சில வேலைகளை செய்தேன். இப்போது முடி துளிர்த்துக்கொண்டுள்ளது. அதுபோல நானும் துளிர்த்து விடுவேன். இந்த இடைப்பட்ட காலத்தில் யார் நண்பன், யார் எதிரி என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். எனவேஇந்த இடைவெளி வீணாகப் போகவில்லை.நான் பழைய கார்த்திக் அல்ல, அதாவது எனக்கு வயதாகி விட்டதை குறிப்பிட அவ்வாறு சொல்கிறேன். நடுத்தரவயது புதுமுகமாக உங்கள் முன் நிற்கிறேன். இப்போதைக்கு எனது வேலை நடிப்பு மட்டும் தான், அதை நான்சரியாக செய்யப் போகிறேன் என்றார் கார்த்திக்.

விஜயகாந்த்துடன் சேர மாட்டேன்- கார்த்திக் விஜயகாந்த் கட்சியில் சேரும் எண்ணம் இல்லை. நானே கட்சி ஆரம்பிப்பது குறித்து இப்போது எதுவும்கூறுவதற்கில்லை என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் முக்கியமானவராக ஒரு காலத்தில் கலக்கியவர் கார்த்திக். பிறகுபல்வேறு சர்ச்சைகள் பிளஸ் பிரச்சினைகளில் சிக்கி படங்கள் எதுவும் இல்லாமல் சைலன்ட் ஆகி விட்டார்கார்த்திக்.இப்போது அவரது நடிப்பைத் தேடி ஒரு படம் வந்துள்ளது. புத்தம் புது மனிதராக இந்தப் படத்தில் நடிக்கப்போவதாக கார்த்திக் கூறியுள்ளார். செய்தியாளர்களை அழைத்து கார்த்திக் பேசுகையில் பல விஷயங்களைவிலாவரியாக பேசினார்.கார்த்திக்கின் பேட்டியிலிருந்து சில துளிகள்..150 படங்கள் நடித்து விட்டேன். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக நான் பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். நான் நடித்த சில படங்கள் வராததற்கும், சில படங்கள் ஓடாததற்கும் நான் தான் காரணம் என்றுகூறினார்கள். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை.என்னால் எந்தப் படமும் தாமதமானதில்லை, ஓடாமலும் இருந்ததில்லை. என்னைக் குறை கூறுபவர்களுக்குஅதனால் லாபம் ஏற்படும் என்றால் அதைத் தடுக்க நான் விரும்பவில்லை. என்னைத் தேடி சிலர் வருகிறார்கள்.அவர்களுக்காக நான் நடிக்கிறேன்.அதிமுகவில் நான் சேர விரும்பினேன். ஆனால் அது கை கூடவில்லை. ஏன் அது நடக்கவில்லை என்பது குறித்துஎதுவும் கூற நான் விரும்பவில்லை. விஜயகாந்தை நடிகர் சங்கத் தேர்தலின் போது சந்தித்துப் பேசினேன். அவரது கட்சியில் சேரும் எண்ணத்தினால்அவரை சந்திக்கவில்லை. அப்படி ஒரு யோசனையும் என்னிடம் இல்லை.என் மீது இன்னமும் பிரியம் வைத்துள்ள, எனது தந்தை மீது பாசம் வைத்துள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்காகசரணாலயம் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளேன். அது அரசியல் கட்சியாக மாறுமா என்பதை இப்போதுகூறுவதற்கில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.எனது மகன் கெளதம் இப்போதைக்கு நடிக்க வரவில்லை. பள்ளிப் படிப்பில் தான் அவர் இருக்கிறார். கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு, அவர் விரும்பினால் நடிக்க வருவார்.எனது அடுத்த இலக்கு இயக்கம் தான். சில கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். அநேகமாக நவம்பரில்இந்தப் பணி தொடங்கும்.என்னைப் பொருத்தவரை நான் எதையுமே நுனி நாக்கில் பேசுவதில்லை. இதயத்தின் அடித்தளத்திலிருந்து தான்பேசுவேன். என் கேரியரில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்களிருந்து என்னைக் காப்பாற்றியது, எனது அப்பாவின்பெயரும், சில நல்ல படங்களும் தான்.இடையில் எனது தலை முடி கொட்டி விட்டது. அதற்கு சில வேலைகளை செய்தேன். இப்போது முடி துளிர்த்துக்கொண்டுள்ளது. அதுபோல நானும் துளிர்த்து விடுவேன். இந்த இடைப்பட்ட காலத்தில் யார் நண்பன், யார் எதிரி என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். எனவேஇந்த இடைவெளி வீணாகப் போகவில்லை.நான் பழைய கார்த்திக் அல்ல, அதாவது எனக்கு வயதாகி விட்டதை குறிப்பிட அவ்வாறு சொல்கிறேன். நடுத்தரவயது புதுமுகமாக உங்கள் முன் நிற்கிறேன். இப்போதைக்கு எனது வேலை நடிப்பு மட்டும் தான், அதை நான்சரியாக செய்யப் போகிறேன் என்றார் கார்த்திக்.

Subscribe to Oneindia Tamil

விஜயகாந்த் கட்சியில் சேரும் எண்ணம் இல்லை. நானே கட்சி ஆரம்பிப்பது குறித்து இப்போது எதுவும்கூறுவதற்கில்லை என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் முக்கியமானவராக ஒரு காலத்தில் கலக்கியவர் கார்த்திக். பிறகுபல்வேறு சர்ச்சைகள் பிளஸ் பிரச்சினைகளில் சிக்கி படங்கள் எதுவும் இல்லாமல் சைலன்ட் ஆகி விட்டார்கார்த்திக்.

இப்போது அவரது நடிப்பைத் தேடி ஒரு படம் வந்துள்ளது. புத்தம் புது மனிதராக இந்தப் படத்தில் நடிக்கப்போவதாக கார்த்திக் கூறியுள்ளார். செய்தியாளர்களை அழைத்து கார்த்திக் பேசுகையில் பல விஷயங்களைவிலாவரியாக பேசினார்.

கார்த்திக்கின் பேட்டியிலிருந்து சில துளிகள்..

150 படங்கள் நடித்து விட்டேன். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக நான் பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். நான் நடித்த சில படங்கள் வராததற்கும், சில படங்கள் ஓடாததற்கும் நான் தான் காரணம் என்றுகூறினார்கள். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை.

என்னால் எந்தப் படமும் தாமதமானதில்லை, ஓடாமலும் இருந்ததில்லை. என்னைக் குறை கூறுபவர்களுக்குஅதனால் லாபம் ஏற்படும் என்றால் அதைத் தடுக்க நான் விரும்பவில்லை. என்னைத் தேடி சிலர் வருகிறார்கள்.அவர்களுக்காக நான் நடிக்கிறேன்.

அதிமுகவில் நான் சேர விரும்பினேன். ஆனால் அது கை கூடவில்லை. ஏன் அது நடக்கவில்லை என்பது குறித்துஎதுவும் கூற நான் விரும்பவில்லை.

விஜயகாந்தை நடிகர் சங்கத் தேர்தலின் போது சந்தித்துப் பேசினேன். அவரது கட்சியில் சேரும் எண்ணத்தினால்அவரை சந்திக்கவில்லை. அப்படி ஒரு யோசனையும் என்னிடம் இல்லை.

என் மீது இன்னமும் பிரியம் வைத்துள்ள, எனது தந்தை மீது பாசம் வைத்துள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்காகசரணாலயம் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளேன். அது அரசியல் கட்சியாக மாறுமா என்பதை இப்போதுகூறுவதற்கில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

எனது மகன் கெளதம் இப்போதைக்கு நடிக்க வரவில்லை. பள்ளிப் படிப்பில் தான் அவர் இருக்கிறார். கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு, அவர் விரும்பினால் நடிக்க வருவார்.

எனது அடுத்த இலக்கு இயக்கம் தான். சில கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். அநேகமாக நவம்பரில்இந்தப் பணி தொடங்கும்.

என்னைப் பொருத்தவரை நான் எதையுமே நுனி நாக்கில் பேசுவதில்லை. இதயத்தின் அடித்தளத்திலிருந்து தான்பேசுவேன். என் கேரியரில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்களிருந்து என்னைக் காப்பாற்றியது, எனது அப்பாவின்பெயரும், சில நல்ல படங்களும் தான்.

இடையில் எனது தலை முடி கொட்டி விட்டது. அதற்கு சில வேலைகளை செய்தேன். இப்போது முடி துளிர்த்துக்கொண்டுள்ளது. அதுபோல நானும் துளிர்த்து விடுவேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் யார் நண்பன், யார் எதிரி என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். எனவேஇந்த இடைவெளி வீணாகப் போகவில்லை.

நான் பழைய கார்த்திக் அல்ல, அதாவது எனக்கு வயதாகி விட்டதை குறிப்பிட அவ்வாறு சொல்கிறேன். நடுத்தரவயது புதுமுகமாக உங்கள் முன் நிற்கிறேன். இப்போதைக்கு எனது வேலை நடிப்பு மட்டும் தான், அதை நான்சரியாக செய்யப் போகிறேன் என்றார் கார்த்திக்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil