»   »  கார்த்திக்கும் அரசியலில் குதிக்கிறார்: அக். 30ல் அறிவிப்பு! நடிகர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து கார்த்திக்கும் அரசியலில் குதிக்கவுள்ளார். தனது அரசியல் பிரவேசத்தை தேவர் குரு பூஜைதினமான அக்டோபர் 30ம் தேதி மதுரையில் அவர் அறிவிக்கிறார். தமிழ் திரைப்படங்களைப் பார்க்கும் அத்தனை பேராலும் ரசிக்கப்படுபவர் கார்த்திக். தனக்கென தனி இடத்தை வைத்துக்கொண்டுள்ள கார்த்திக் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி படங்களைக் குறைத்துக் கொண்டார்.ஒரு வழியாக பிரச்சினைகளிலிருந்து மீண்டு, மீண்டும் அவர் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் சரணாலயம் என்ற புதியஅமைப்பை கார்த்திக் தொடங்கினார். தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய இளைஞர்களை ஒன்று திரட்டும் பணியிலும் கார்த்திக்இறங்கினார். இதனால் கார்த்திக் அரசியலில் குதிக்கவுள்ளதாக பேச்சு எழுந்தது.ஆனால் சரணாலயம் அமைப்பின் மூலம் சமூக சேவையில் மட்டுமே ஈடுபடப் போவதாகவும், அரசியலில் நுழையும் எண்ணம்இல்லை என்றும் அவர் விளக்கினார். ராஜபாளையத்தில் அவரது அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய அளவில்ரசிகர்கள், தேவர் சமுதாயத்தினர் கூடியதால் கார்த்திக் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.அதே வேகத்தில் மதுரையிலும் ஒரு கூட்டத்தைக் கூட்டினார் கார்த்திக். அங்கும் கடல் போல திரண்டனர் ரசிகர்கள். மதுரைக்கூட்டத்தில் அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களிடையே ஏற்பட்டரகளையால் கூட்டம் பாதியில் முடிந்தது.இந்த நிலையில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த மற்ற நடிகர்களான விவேக், செந்தில், அருண்பாண்டியன் போன்றோர்கார்த்திக்குடன் நெருங்கி வரத் தொடங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள, நடிகர் செந்திலின்ஊரான இளஞ்செம்பூர் கிராமத்தில் நடந்த கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், கார்த்திக், விவேக், செந்தில் ஆகியோர் ஒன்றாககலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் கார்த்திக்கை வெகுவாகப் புகழ்ந்தும், தேவர் சமுதாயத்தை தூக்கி நிறுத்த வந்தவர் என்றரீதியிலும் பேசினர். நடிகர் கார்த்திக் பேசுகையில், தனது அமைப்பின் நோக்கம் குறித்துப் பேசினார். அதேசமயம் அரசியல்பிரவேசம் குறித்தும் கோடிட்டுக்க் காட்டினார்.அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நடைபெறும் குருபூஜையில் தான்கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளதாக குறிப்பிட்ட அவர் அன்றைய தினம் தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கியஅறிவிப்பு வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.மதுரையில் இதுதொடர்பாக தான் விரிவாகப் பேசவுள்ளதாகவும், அதுவரை ரசிகர்களும், முக்குலத்தோர் இளைஞர்களும்பொறுமையாக இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். கார்த்திக்கின் இந்த அறிவிப்பின் மூலம் அவரும் அரசியலில்நுழையப் போவது உறுதியாகியுள்ளது. ஒரு வேளை கார்த்திக் அரசியல் கட்சி தொடங்கினார் விவேக், செந்தில், அருண்பாண்டியன் போன்ற தேவர் சமுதாய நடிகர்கள்அக்கட்சியில் சேரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக்கும் அரசியலில் குதிக்கிறார்: அக். 30ல் அறிவிப்பு! நடிகர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து கார்த்திக்கும் அரசியலில் குதிக்கவுள்ளார். தனது அரசியல் பிரவேசத்தை தேவர் குரு பூஜைதினமான அக்டோபர் 30ம் தேதி மதுரையில் அவர் அறிவிக்கிறார். தமிழ் திரைப்படங்களைப் பார்க்கும் அத்தனை பேராலும் ரசிக்கப்படுபவர் கார்த்திக். தனக்கென தனி இடத்தை வைத்துக்கொண்டுள்ள கார்த்திக் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி படங்களைக் குறைத்துக் கொண்டார்.ஒரு வழியாக பிரச்சினைகளிலிருந்து மீண்டு, மீண்டும் அவர் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் சரணாலயம் என்ற புதியஅமைப்பை கார்த்திக் தொடங்கினார். தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய இளைஞர்களை ஒன்று திரட்டும் பணியிலும் கார்த்திக்இறங்கினார். இதனால் கார்த்திக் அரசியலில் குதிக்கவுள்ளதாக பேச்சு எழுந்தது.ஆனால் சரணாலயம் அமைப்பின் மூலம் சமூக சேவையில் மட்டுமே ஈடுபடப் போவதாகவும், அரசியலில் நுழையும் எண்ணம்இல்லை என்றும் அவர் விளக்கினார். ராஜபாளையத்தில் அவரது அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய அளவில்ரசிகர்கள், தேவர் சமுதாயத்தினர் கூடியதால் கார்த்திக் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.அதே வேகத்தில் மதுரையிலும் ஒரு கூட்டத்தைக் கூட்டினார் கார்த்திக். அங்கும் கடல் போல திரண்டனர் ரசிகர்கள். மதுரைக்கூட்டத்தில் அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களிடையே ஏற்பட்டரகளையால் கூட்டம் பாதியில் முடிந்தது.இந்த நிலையில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த மற்ற நடிகர்களான விவேக், செந்தில், அருண்பாண்டியன் போன்றோர்கார்த்திக்குடன் நெருங்கி வரத் தொடங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள, நடிகர் செந்திலின்ஊரான இளஞ்செம்பூர் கிராமத்தில் நடந்த கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், கார்த்திக், விவேக், செந்தில் ஆகியோர் ஒன்றாககலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் கார்த்திக்கை வெகுவாகப் புகழ்ந்தும், தேவர் சமுதாயத்தை தூக்கி நிறுத்த வந்தவர் என்றரீதியிலும் பேசினர். நடிகர் கார்த்திக் பேசுகையில், தனது அமைப்பின் நோக்கம் குறித்துப் பேசினார். அதேசமயம் அரசியல்பிரவேசம் குறித்தும் கோடிட்டுக்க் காட்டினார்.அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நடைபெறும் குருபூஜையில் தான்கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளதாக குறிப்பிட்ட அவர் அன்றைய தினம் தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கியஅறிவிப்பு வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.மதுரையில் இதுதொடர்பாக தான் விரிவாகப் பேசவுள்ளதாகவும், அதுவரை ரசிகர்களும், முக்குலத்தோர் இளைஞர்களும்பொறுமையாக இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். கார்த்திக்கின் இந்த அறிவிப்பின் மூலம் அவரும் அரசியலில்நுழையப் போவது உறுதியாகியுள்ளது. ஒரு வேளை கார்த்திக் அரசியல் கட்சி தொடங்கினார் விவேக், செந்தில், அருண்பாண்டியன் போன்ற தேவர் சமுதாய நடிகர்கள்அக்கட்சியில் சேரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து கார்த்திக்கும் அரசியலில் குதிக்கவுள்ளார். தனது அரசியல் பிரவேசத்தை தேவர் குரு பூஜைதினமான அக்டோபர் 30ம் தேதி மதுரையில் அவர் அறிவிக்கிறார்.


தமிழ் திரைப்படங்களைப் பார்க்கும் அத்தனை பேராலும் ரசிக்கப்படுபவர் கார்த்திக். தனக்கென தனி இடத்தை வைத்துக்கொண்டுள்ள கார்த்திக் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி படங்களைக் குறைத்துக் கொண்டார்.

ஒரு வழியாக பிரச்சினைகளிலிருந்து மீண்டு, மீண்டும் அவர் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் சரணாலயம் என்ற புதியஅமைப்பை கார்த்திக் தொடங்கினார். தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய இளைஞர்களை ஒன்று திரட்டும் பணியிலும் கார்த்திக்இறங்கினார். இதனால் கார்த்திக் அரசியலில் குதிக்கவுள்ளதாக பேச்சு எழுந்தது.

ஆனால் சரணாலயம் அமைப்பின் மூலம் சமூக சேவையில் மட்டுமே ஈடுபடப் போவதாகவும், அரசியலில் நுழையும் எண்ணம்இல்லை என்றும் அவர் விளக்கினார். ராஜபாளையத்தில் அவரது அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய அளவில்ரசிகர்கள், தேவர் சமுதாயத்தினர் கூடியதால் கார்த்திக் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.

அதே வேகத்தில் மதுரையிலும் ஒரு கூட்டத்தைக் கூட்டினார் கார்த்திக். அங்கும் கடல் போல திரண்டனர் ரசிகர்கள். மதுரைக்கூட்டத்தில் அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களிடையே ஏற்பட்டரகளையால் கூட்டம் பாதியில் முடிந்தது.

இந்த நிலையில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த மற்ற நடிகர்களான விவேக், செந்தில், அருண்பாண்டியன் போன்றோர்கார்த்திக்குடன் நெருங்கி வரத் தொடங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள, நடிகர் செந்திலின்ஊரான இளஞ்செம்பூர் கிராமத்தில் நடந்த கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், கார்த்திக், விவேக், செந்தில் ஆகியோர் ஒன்றாககலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் கார்த்திக்கை வெகுவாகப் புகழ்ந்தும், தேவர் சமுதாயத்தை தூக்கி நிறுத்த வந்தவர் என்றரீதியிலும் பேசினர். நடிகர் கார்த்திக் பேசுகையில், தனது அமைப்பின் நோக்கம் குறித்துப் பேசினார். அதேசமயம் அரசியல்பிரவேசம் குறித்தும் கோடிட்டுக்க் காட்டினார்.

அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நடைபெறும் குருபூஜையில் தான்கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளதாக குறிப்பிட்ட அவர் அன்றைய தினம் தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கியஅறிவிப்பு வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மதுரையில் இதுதொடர்பாக தான் விரிவாகப் பேசவுள்ளதாகவும், அதுவரை ரசிகர்களும், முக்குலத்தோர் இளைஞர்களும்பொறுமையாக இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். கார்த்திக்கின் இந்த அறிவிப்பின் மூலம் அவரும் அரசியலில்நுழையப் போவது உறுதியாகியுள்ளது.

ஒரு வேளை கார்த்திக் அரசியல் கட்சி தொடங்கினார் விவேக், செந்தில், அருண்பாண்டியன் போன்ற தேவர் சமுதாய நடிகர்கள்அக்கட்சியில் சேரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil