Karthika Nair marriage: கேரளாவில் களைகட்டிய கார்த்திகா நாயர் திருமணம்.. மணமேடையில் ஜொலித்த ராதா மகள்
திருவனந்தபுரம்: நடிகை ராதாவின் மகளும் நடிகையுமான கார்த்திகா நாயர் திருமணம் இன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
இன்று ஒரு பக்கம் உலக கோப்பை கிரிக்கெட் மற்றொரு பக்கம் மன்சூர் அலி கான் - த்ரிஷா சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், டென்ஷனே இல்லாமல் செம ஜாலியாக ராதாவின் மகள் திருமணம் நடைபெற்றுள்ளது.

பூரண சுபமுகூர்த்த நாளான இன்று ரோகித் மேனன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் கார்த்திகா நாயர்.
ராதா மகள்: நடிகைகள் அம்பிகா, ராதா சகோதரிகள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். பாரதிராஜா இயக்கத்தில் கார்த்தி நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான ராதா டிக் டிக் டிக், எங்கேயோ கேட்ட குரல், கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 58 வயதாகும் நடிகை ராதா தனது மூத்த மகள் கார்த்திகா நாயருக்கு இன்று திருமணம் செய்து வைத்துள்ளார்.

கார்த்திகா நாயர் படங்கள்: இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்தார் கார்த்திகா நாயர். அம்மாவை போலவே தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். அன்னக்கொடி, புறம்போக்கு எனும் பொது உடைமை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர் தொடர்ந்து சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவரது தங்கை துளசியும் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் அறிமுகமானார். ஆனால், தொடர்ந்து பெரிதாக திரைத்துறையில் நீடிக்கவில்லை.

பிரம்மாண்ட திருமணம்: இந்நிலையில், கார்த்திகா நாயர் ரோகித் மேனன் என்பவரை கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள உதய் சமுத்ரா பீச் ஹோட்டலில் பிரம்மாண்டமாக இன்று நடத்தி உள்ளனர். நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், இன்று நடைபெற்ற திருமண நிகழ்விலும் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
சிரஞ்சீவி முதல் ராதிகா வரை: ராதா மகளின் திருமணத்தில் டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவி முதல் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகை ராதிகா சரத்குமார், இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா, ராதாவின் சகோதரி அம்பிகா, சுஹாசினி மணிரத்னம், ரேவதி, நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











