வாவ்... அசத்தும் 'அப்சரஸ்' ஆக மாறிய 'கோ' கார்த்திகா!

By Sudha

சென்னை: மலையாளத்தில் உருவான மகர மஞ்சு தமிழில் அப்சரஸ் என்ற பெயர் மாறி வருகிறது. சும்மா சொல்லக் கூடாது, ராதா மகள் கார்த்திகா படு அழகாக இருக்கிறார்.

கோ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவரான கார்த்திகா, அப்படம் ஓஹோவென ஓடியதால், ஹிட் நாயகிகள் வரிசையில் சேர்ந்தார். தற்போது பார்த்துப் பார்த்துப் படம் பண்ணி வருகிறார்.

தனது தாயாரை அறிமுகப்படுத்தி மெருகேற்றி வளர வைத்த பாரதிராஜாவின் கையால் தற்போது குட்டுப்பட்டு அன்னக்கொடி படத்தில் அசத்தியுள்ளார்.

தாய்மொழியில் மகர மஞ்சு

தாய்மொழியில் மகர மஞ்சு

கார்த்திகா தனது தாய் மொழியான மலையாளத்தில் நடித்த படம்தான் மகர மஞ்சு. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சந்தோஷ் சிவன். ஆமாம், ஒளிப்பதிவாளர்தான்.

ரவிவர்மா கதை

ரவிவர்மா கதை

இது ராஜா ரவிவர்மாவின் கதையாகும். ரவிவர்மா வேடத்தில்தான் சந்தோஷ் சிவன் நடித்துள்ளார்.

தமிழுக்கு வருகிறது

தமிழுக்கு வருகிறது

இந்தப் படத்தை தற்போது தமிழில் டப் செய்து அப்சரஸ் என்ற பெயரில் வெளியிடுகின்றனர்.

தாசி வேடத்தில்

தாசி வேடத்தில்

இப்படத்தில் தாசி வேடத்தில் வருகிறார் கார்த்திகா. அந்த வேடத்திற்காக நிறைய ஸ்டடி செய்தாராம். அம்மாவும் நிறைய டிப்ஸ் கொடுத்தாராம். விளைவு- நிஜமான தாசி போலவே படத்தில் காட்சி தருகிறாராம் கார்த்திகா.

பூர்ணா, நித்யா, மல்லிகா கபூரும்...

பூர்ணா, நித்யா, மல்லிகா கபூரும்...

படத்தில் கார்த்திகா மட்டுமல்ல. பூர்ணா, நித்யா மேனன், மல்லிகா கபூரும் இருக்கிறார்கள். அனைவரையும் படத்தில் கவர்ச்சியாகவும், அழகாகவும் காட்டியுள்ளாராம் இயக்குநர் லெனின் ராஜேந்திரன்.

அப்சரஸ் தமிழ் ரசிகர்களையும் மயக்குவாரா... பார்க்கலாம்.!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X