அனேகன் படப்பிடிப்பில், தனுஷிற்கு அறிவுரை சொன்ன நவரசநாயகன்

நவரசநாயகன்
சென்னை: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'அனேகன்'. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக அமிரா என்ற மும்பைப் பெண் அறிமுகமாகிறார்.

கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் 'ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. களவாணி, வாகை சூடவா, ஆரம்பம் படங்களில் பணியாற்றிய ஓம் பிரகாஷ், இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கே.வி. ஆனந்தின் முந்தைய படங்களுக்கு பல ஹிட் பாடல்களை வழங்கிய ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திலும் இசையமைக்க உள்ளார்.

நெடுநாட்களுக்குப் பிறகு, இப்படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். சமீபத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட்டன. கார்த்திக்குடன் நடித்த அனுபவம் குறித்து ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ்.

முதல்நாள் ஷூட்டிங்கில் கார்த்திக் இளமையான நடிப்பைப் பார்த்து அசந்து விட்டாராம் தனுஷ். கார்த்திக் பார்ப்பதற்கு கௌதமின் அப்பா போல் இல்லை, அண்ணன் போல் இருக்கிறார் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து, தனுஷிற்கு கார்த்திக் பின்வரும் அறிவுரை ஒன்றை வழங்கினாராம்.'புத்திசாலித்தனமானவராக இருக்காதீர்கள், அப்படியும் நடிக்காதீர்கள். அப்படி இருந்தால் பார்ப்பவர்களுக்கு நீங்கள் போரடித்துப் போய் விடுவீர்கள்...' என தனது ட்வீட்டரில் கூறியிருக்கிறார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X