கார்த்திக்கின் மனைவி என்ன அழகு பாருங்க.. அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கௌதம் ராம் கார்த்திக்
சென்னை: நடிகர் கார்த்திக் 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக கொடிகட்டி பறந்தார். நவரச நாயகன் கார்த்திக்கின் மகன்தான் கௌதம் ராம் கார்த்திக். அப்பாவை போலவே அவருடைய மகனும் சினிமாவில் அறிமுகமாகி நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது அம்மா ராகினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
'
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் ராம் கார்த்திக், கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகளான துளசி நாயர் நடித்திருந்தார். கார்த்திக், ராதா இருவருக்கும் முதல் படம் அலைகள் ஓய்வதில்லை. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதே போல, இவர்களின் வாரிசுகளையும் கடல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினால், பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என மணிரத்னம் நினைத்தார். ஆனால், படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது.
கௌதம் ராம் கார்த்திக்: அதைத்தொடர்ந்து கௌதம் ராம் கார்த்திக், ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தேவராட்டம் படத்தில் நடித்த போது உடன் நடித்த மஞ்சுமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, கௌதம், இயக்குநர் சூரிய பிரதாப் .எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரூட்' எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அபார்சக்தி குரானா , பவ்யா தரிகா, வை. ஜி. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர் ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

பிறந்த நாள்: இந்நிலையில், நடிகர் கௌதம் ராம் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் அம்மாவிற்கு உருக்கமாக பிறந்த நாள் வாழ்த்து கூறி அவரின் சிறுவயது போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில், இந்த உலகத்திலேயே சிறந்த அம்மா நீங்கதான். இன்னும் நூறு ஜென்மம் ஆனாலும், நான் உங்க மகனா பிறக்க வேண்டும். இந்த உலகம் உங்களை சோதிச்சப்போ கூட, ஜாலியா, கூலா இருந்தீங்க, நம்மை எல்லாரும் உடைச்ச போதும் சிரிந்த முகத்தோடு குடும்பத்தை காப்பாற்றினீங்க, ஆபத்து உங்க பையன்களை நெருங்கி வந்தப்போ, ஒரு சிங்கமா மாறுனீங்க, ஒரு அம்மாவா உங்க கடமைய செய்தீங்க, எங்களுக்கு யாரும் இல்லாதப்போ, எங்களுக்கு எந்த திசையும் இல்லாதப்போ, எங்களின் கேப்டன் இல்லாதப்போ, எங்களுக்கு மனசு கஷ்டப்பட்டப்போ, எங்க பக்கத்துல இருந்தது நீங்க நான், நீங்க செஞ்ச தியாகங்களுக்கு எதுவும் ஈடாகாது. அதற்காக, நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கௌதம் ராம் கார்த்திக் உருக்கமாக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

கார்த்திக்கை பிரிந்தார்: நடிகர் கார்த்திக், ராகினியும் இணைந்து சோலைக்குயில் திரைப்படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்துகொண்டனர். ராகினி கர்ப்பமாக இருந்த சமயத்தில், அவரைப் பார்க்க வந்த ராகினியின் சகோதரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால், ஏற்பட்ட பிரச்சனையில் ராகினி அவரை விட்டு பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. கௌதம் ராம் கார்த்திக், ஒரு பேட்டியில், பெற்றோர் சிறு வயதிலேயே பிரிந்துவிட்டார்கள். "என்னையும் என் சகோதரனையும் என் அம்மாதான் வளர்த்தார். அப்பா வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே தொலைபேசி பேசுவார், எப்போதாவது வந்து பார்ப்பார். நண்பர்களும் உறவினர்களுமே எனக்கு ஆறுதலாக இருந்தார்கள் என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











