ரொம்ப வலிக்குது.. அப்படியே அணைச்சுக்கறேன்.. நெகிழ்ந்து போன கார்த்திக் சுப்புராஜ்!
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கர்ணன் படத்தை வெகுவாக பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் மாரி செல்வராஜின் எழுத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், தனுஷின் நடிப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறதுஎன்றும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிகரமாக
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன். நடிகை ரெஜினா விஜயன், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லால், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

23 கோடி வசூல்
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெளியாகி உள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தமிழகத்தில் முதல் 3 நாட்களில் மட்டும் இப்படம் 23 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், முதல் நாளில் மட்டும் 10 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை தனுஷின் எந்த திரைப்படமும் இந்த சாதனை பெறவில்லை.

குவியும் பாராட்டு
இப்படம் வெளியானது முதல் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறை பிரபலங்கள் , அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இப்படத்தை புகழ்ந்து வருகின்றனர். இப்படத்தை பார்த்த விஜய்சேதுபதி, மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து பாராட்டியதோடு, அவரது கையை பிடித்து முத்தமும் கொடுத்துள்ளார். மேலும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும், குறியீடுகளும் நிறைய அந்த உச்சந்தலை முத்தம், சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை என்று பொட்டில் அடிக்கும் படம் என்று பாராட்டி இருந்தார்.

நடிப்பு கர்ணா
இந்நிலையில், கர்ணன் படத்தை பாராட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், கர்ணன் பேசும் உண்மை, மிகுந்த வலி தருகிறது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும், படத்தொகுப்பாளர் செல்வாவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் மாரி செல்வராஜின் எழுத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். நம்மிடம் காட்ட இன்னும் எவ்வளவு வைத்துள்ளார் என தனுஷின் நடிப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. நடிப்பு கர்ணா எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











