Japan Teaser: என்ன ஒரே இருட்டா இருக்குது!.. டார்க் காமெடியோ.. ஜப்பான் டீசர் எப்படி இருக்கு?
சென்னை: குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி என லோ பட்ஜெட்டில் தரமான படங்களை இயக்கி வந்த இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஒரு டார்க் காமெடி படமாக ஜப்பான் உருவாகி வந்த நிலையில், தற்போது அதன் டீசர் வெளியாகி உள்ளது.
டார்க் காமெடி படம் என்பதால் படம் முழுக்க ஒரே இருட்டாக எடுத்து வைத்து விட்டாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. தங்கமாக மின்னுவது போல தக தகன்னு கார்த்தி போஸ்டர் எல்லாம் பளிச்சென வந்த நிலையில், டீசரை பல மடங்கு பிரைட்னஸ் வைத்துத் தான் பார்க்க வேண்டும் போல இருக்கிறது.

கார்த்தியின் ஜப்பான்: கார்த்தி வழக்கத்தை விட தாறுமாறான பர்ஃபார்மன்ஸை ஜப்பானாக கொடுத்துள்ளார். அவரது தங்கப் பல் வேறலெவல். மாவீரன் படத்தில் இருந்து அதே கெட்டப்புடன் சுனிலை நடிக்க வைத்தது போல தெரிகிறது.
நம்ம வீட்டுப் பிள்ளை படத்திற்கு பிறகு காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல் மீண்டும் தமிழ் படத்தில் தென்பட்டுள்ளார். வரும் தீபாவளிக்கு பல படங்களுடன் போட்டியாக வெளியாக உள்ள ஜப்பான் திரைப்படம் ராஜு முருகனின் ஷார்ப்பான கதையுடன் உருவாகி இருந்தால் தாறுமாறு ஹிட் அடிப்பது கன்ஃபார்ம்.
ராஜு முருகன் இயக்கம்: வித்தியாசமான படங்களை இயக்கி அரசுக்கு எதிராக குரலை உயர்த்தி வந்த ராஜு முருகன் உடம்பில் லோகேஷ் கனகராஜ் ஆவி உள்ளே போனது போல கொள்ளை அடிப்பது, ஜப்பான் மீது நாடு முழுவதும் 182 கேஸ் இருக்கு, சரக்கு, பொண்ணு என ஜமாய்த்துக் கொண்டிருப்பார் என கார்த்தியை படு கிரே ஷேடில் காட்டி உள்ளனர்.
ரோலக்ஸ் ஆக அண்ணன் சூர்யா வில்லத்தனத்தில் மிரட்டி எடுத்த நிலையில், தம்பி கார்த்தியும் வில்லத்தனத்தில் ட்ரை பண்ணப் போகிறாரா? என்கிற கேள்வியும் டீசரை பார்க்கும் போது எழத்தான் செய்கிறது.
டீசர் எப்படி இருக்கு?: மேலும், கைதி படத்தில் பயன்படுத்திய அதே கொசு மருந்து துப்பாக்கியை வைத்து இங்கேயும் கார்த்தி சுடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பெரி துப்பாக்கி வந்துடுச்சு படம் சூப்பர் ஹிட் தான் என ரசிகர்களும் ஜப்பானை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனைத்தையும் விட எத்தனை குண்டை போட்டாலும் இந்த ஜப்பானை யாராலும் அழிக்க முடியாது என ராஜு முருகன் கடைசியில் வைத்துள்ள அந்த அரசியல் வசனம் தான் ஹைலைட்டாக தெரிகிறது. படமாக எப்படி வருவது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். டிரைலராக சுமார் ரகம் தான். எந்தவொரு புதிய காட்சிகளோ, கதையமைப்போ தென்படவில்லை.


Click it and Unblock the Notifications











