Meiyazhagan Box Office Prediction: பாசிட்டிவ் விமர்சனங்கள்.. மெய்யழகன் முதல் நாள் வசூல் கணிப்பு!
சென்னை: கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். பத்திரிகையாளர் காட்சியிலேயே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ள நிலையில், செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் மெய்யழகன் வெளியாகிறது.
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் சொதப்பிய நிலையில், மெய்யழகன் திரைப்படம் கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து அசத்திய கார்த்தி மெய்யழகன் படத்தில் மெய்யழகனாக நடித்து ரசிகர்களை மனங்கவர காத்திருக்கிறார்.

கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தை பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு எல்லாம் பார்க்காமல் படமாக வந்து பாருங்கள், வசூல் கணக்கை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம் என தயாரிப்பாளர் சூர்யா சொல்லியிருக்கும் நிலையில், முதல் நாளில் இந்த படம் எந்தளவுக்கு வசூலை அள்ளும் என்கிற கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.
கார்த்தியின் மெய்யழகன்: 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள அழகான படமாக உருவாகியுள்ள மெய்யழகன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்க்கவுட் ஆகியுள்ள நிலையில், படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.
பாசிட்டிவ் விமர்சனங்கள்: இயக்குநர் பிரேம் குமார் மனித உணர்வுகளையும் உறவுகளையும் கையாண்டுள்ள விதத்திற்காகவே இந்த படத்தை கொண்டாடலாம் என பல விமர்சகர்களும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளித் தெளித்திருக்கும் நிலையில், நாளை மக்கள் கூட்டம் நிச்சயம் மெய்யழகன் படத்தை திரையரங்குக்கு சென்று பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஜூனியர் என்டிஆரின் தேவரா, விஜய் ஆண்டனியின் ஹிட்லர், சதீஷ் நடித்துள்ள சட்டம் என் கையில், பிரபுதேவாவின் பேட்ட ராப் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகும் நிலையில், மெய்யழகன் படம் மனதுக்கு நிறைவான படமாக இருக்கும் என்கின்றனர்.
முதல் நாள் வசூல் கணிப்பு: கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் முதல் நாளில் 4.15 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்தது. சர்தார் திரைப்படம் 4.30 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் அள்ளியிருந்தது. இந்நிலையில், மெய்யழகன் திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 5.50 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான பொருட்செலவில் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை முதல் வாரத்திலேயே அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கார்த்திக்கு மிகப்பெரிய கம்பேக் ஆக அமையும் என தெரிகிறது.
வா வாத்தியார்: மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் வா வாத்தியார் திரைப்படம் திரைக்கு வர காத்திருக்கிறது. நவம்பர் 14ம் தேதி சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்திலும் கிளைமேக்ஸில் கார்த்தி ஸ்பெஷல் கேமியோவாக வரப்போவதையும் ஏற்கனவே டிரெய்லரில் மறைமுகமாக காட்டியுள்ள நிலையில், இந்த ஆண்டு அடுத்தடுத்து கார்த்தி ரசிகர்களுக்கு சிறப்பான தரமான சம்பவம் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வரும் நிலையில், கூலி படத்தை முடித்தவுடன் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை எடுப்பார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











