அண்ணா கருப்பசாமியா ஆடிட்டாரு.. தம்பி ‘சர்தார் 2’ மூலம் சரவெடியா வெடிக்கப் போறாரு.. ரிலீஸ் தேதி இதோ!
சென்னை: நடிகர் சூர்யாவுக்கு பல ஆண்டுகளாக சூப்பர் பிளாக்பஸ்டர் படங்களே அமையாத நிலையில், இந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம் அந்த குறையை போக்கியுள்ளது. முதல் 6 மாத காலங்களில் வெளியான படங்களிலேயே இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படமாக நம்பர் ஒன் இடத்தில் சூர்யாவின் கருப்பு படம் தான் உள்ளது.
கருப்பசாமியாக அண்ணன் சூர்யா போட்ட ஆட்டத்தால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜப்பான், மெய்யழகன், வா வாத்தியார் என கார்த்தி நடித்த படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியை குவிக்க தவறிய நிலையில், சர்தார் 2 அந்த குறையை போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்தார் முதல் பாகம் வெற்றிப் பெற்ற நிலையில், அதன் 2ம் பாகம் மிகப்பெரிய கம்பேக் படமாக கார்த்திக்கு அமையும் என எதிர்பார்க்கின்றனர். அதன் ரிலீஸ் தேதியை சற்றுமுன் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
கர்ஜிக்க காத்திருக்கும் கார்த்தி: இரும்புத் திரை, ஹீரோ, சர்தார் படங்களை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ். மித்ரன் மீண்டும் கார்த்தியுடன் இணைந்து உருவாக்கியுள்ள சர்தார் 2 திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வா வாத்தியார் வெளியாகி வந்ததே தெரியாமல் வாஷ் அவுட் ஆனது. இந்நிலையில், சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
சர்தார் 2 ரிலீஸ் தேதி: வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி சர்தார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்கிற அறிவிப்பை பிரின்ஸ் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ரஜிஷா விஜயன், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யா தான் மெயின் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டிப்பாக கார்த்திக்கு கம்பேக் படமாக சர்தார் 2 அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications