வா வாத்தியார் டீசர் ரிலீஸ்.. பட்டையை கிளப்புதே.. கார்த்திக்கு அடுத்த ஹிட் பார்சலோ?

சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது 25ஆவது படமான ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 96 பிரேம் இயக்கும் மெய்யழகன் படத்தில் நடித்த அவர்; இப்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார், டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் வா வாத்தியார் படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக்கொண்டார்.

karthi nalan kumarasamy

வந்தியத்தேன்: குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் அந்தப் படத்தில் மற்றவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரத்தைவிட பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த அட்டகாசமான உழைப்புதான்.

ஜப்பான்: இந்த சூழலில் ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25ஆவது படமாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் என்பதால் ராஜுமுருகனின் இயக்கத்திற்கென்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் படம் கடந்த வருட தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இதில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.

மெய்யழகன்: கடைசியாக அவர் 96 இயக்குநர் பிரேம் இயக்கத்தில் மெய்யழகன் படத்தில் நடித்தார். இதில் அவருடன் அரவிந்த் சாமி, தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக கார்த்தியின் நடிப்பு அபாரமாக இருந்தது என்றும்; இது காலத்துக்கும் அவரது கரியரில் சிறந்த படமாக அமைந்துவிட்டது என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

வா வாத்தியாரே: இதற்கிடையே சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய மிகச்சிறந்த படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. இதில் அவருடன் சத்யராஜ், கிருத்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில் இன்று வா வாத்தியார் டீசர் ரிலீஸாகியிருக்கிறது. டீசர் முழுவதும் கார்த்தி பக்காவாக ஸ்கோர் செய்கிறார். இதில் அவர் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும் டீசரில் இடம்பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணனின் இசையும் பக்காவாக இருக்கிறது. டீசரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக கார்த்திக்கு அடுத்த ஹிட் பார்சல்தான் என்று இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X