MGR இறந்த நாளில் பிறந்த கார்த்தி.. காலில் இருக்கும் மச்சம்.. வா வாத்தியார் படத்தில் தரமான காட்சி!
சென்னை: ஞானவேல் ராஜா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படம் பிரச்சினைகள் முடிந்து வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளநிலையில், sneak peek வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த காட்சி எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரையும் கவர்ந்துள்ளது.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படம். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூது கவ்வும் படத்தை போன்று இப்படத்திலும் டார்க் க்யூமர் காமெடி காட்சிகளும், அரசியல் நைய்யாண்டிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றனர். வா வாத்தியார் படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக வருகிறார். எம்ஜிஆரை போன்று உடை அணிவதும், வாத்தியார் வழியில் சாட்டையை சுழட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக இவரது நடிப்பில் வெளியான மெய்யழகன் நல்ல விமர்சனங்களை பெற்றது.

வா வாத்தியார்: இந்நிலையில் தற்போது 'வா வாத்தியார்' Sneak Peek வெளியாகி உள்ளது. அதில், எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரத்தில், அவரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், குடியிருந்த கோவில் படத்தின் பெட்டியை நள்ளிரவில் தியேட்டருக்கு எடுத்து வந்து, மருத்துவமனையில் இருக்கும் எம்ஜிஆரைத்தான் பார்க்க முடிவில்லை, இந்த படத்தைப் போட்டு அனைவரும் பார்க்கிறோம் என்கிறார். படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, படம் பாதியில் நிறுத்தப்பட ராஜ்கிரண் என்ன ஆச்சு, என்று கேட்கிறார். இப்போதுதான் தியேட்டரில் உரிமையாளர் போன் செய்தார் எம்ஜிஆர் இறந்துவிட்டார் என்று சொல்ல ராஜ்கிரணும், ஒட்டுமொத்த ரசிகர்களும் கதறி அழுகின்றனர்.
வாத்தியார் பிறந்துவிட்டார்: அந்த நேரத்தில் ராஜ்கிரணுக்கு பேரன் பிறந்திருப்பதாக தகவல் வருகிறது. மருத்துவமனைக்கு சென்று ராஜ்கிரண் பேரனை பார்க்க, எம்ஜிஆர் காலில் இருப்பது போல, பேரனின் காலில் மச்சம் இருப்பதை பார்த்துவிட்டு, எம்ஜிஆர் இறந்த அதே நேரத்தில் என் பேரன் பிறந்து இருக்கிறார். வாத்தியாரே எனக்கு பேரனாக பிறந்து இருக்கிறார் என அனைவரிடமும் சொல்லி சந்தோஷப்படுகிறார். பேரன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், ஆனந்த்ராஜ், கருணாகரன், ஜி எம் சுந்தர், ரமேஷ் திலக் நிவாஸ் ஆதித்தன், ஷில்பா மஞ்சுநாத் என பலரும் இப் திரைப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது வெளியாகி உள்ள இந்த Sneak Peek இணையத்தில் வைரலாகி படத்தின் மீது பரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











