Vaa Vaathiyaar Trailer: எம்ஜிஆரா? நம்பியாரா?.. கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டிரைலர் எப்படி இருக்கு?

சென்னை: சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிவிட்டு அதன் பிறகு காணாமல் போன இயக்குநர் நலன் குமாரசாமி மீண்டும் கார்த்தியை வைத்து 'வா வாத்தியார்' என்கிற டைட்டிலில் படம் எடுக்கப் போவதாக அறிவிப்பு வந்த உடனே அவரது ரசிகர்கள் ஹைப் ஆனார்கள்.

ஆனால், படம் இப்போ வருது அப்போ வருது என துருவ நட்சத்திரம் போல ரிலீஸ் தேதி மாறிக் கொண்டே போன நிலையில், அந்த ஹைப் மொத்தமும் காலி ஆகிவிட்டது. இந்நிலையில், இந்த வாரம் டிசம்பர் 5 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அடுத்த வாரம் டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் ஆகும் என மாற்றப்பட்டுள்ள 'வா வாத்தியார்' படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி தற்போது வெளியிட்டுள்ளார்.

Karthi s Vaa Vaathiyaar Trailer out now with fantasy touch

அகண்டா 2 படத்தை போல இந்த படத்துக்கும் நிதி சிக்கல் உள்ளது. மேலும், டிசம்பர் 8ம் தேதி நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்குப் பிறகு தான் ரிலீஸ் கன்ஃபார்ம் ஆகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் கண்டிப்பாக டிசம்பர் 12 ரிலீஸ் என படக்குழு உறுதியாக உள்ளது.

வா வாத்தியார் டிரைலர் வெளியானது: நேற்று படமே வெளியாகி இருக்க வேண்டும், இந்நிலையில், தற்போது பல தடைகளை மீறி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் ஃபேண்டஸி போலீஸ் படமாக உருவாகியுள்ளதை டிரைலர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

கலக்கும் கார்த்தி: கடந்த ஆண்டு மெய்யழகன் படத்தில் நடித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த கார்த்தி அடுத்ததாக வா வாத்தியார் படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரைலர் முழுவதும் அவரது முக அழகும், டைமிங் காமெடியும் நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. கடைசியாக குதிரையில் கண்ணுக்கு மாஸ்க் போட்டுக் கொண்டு எம்ஜிஆர் போலவே வருகிறார் கார்த்தி. சத்யராஜ், ராஜ்கிரண் என எம்ஜிஆர் ரசிகர்களை இந்த படத்தில் போட்டிருப்பதும் கச்சிதம்.

ரசிகர்களை ஏமாற்றிவிட வேண்டாம்: அடுத்த வாரம் அனைத்து பிரச்னைகளையும் முடித்து திட்டமிட்டபடி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'வா வாத்தியார்' படத்தை ஏமாற்றாமல் ஸ்டூடியோ க்ரீன் ரிலீஸ் செய்தாலே போதும் என கார்த்தி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த படத்தைத் தொடர்ந்து சர்தார் 2 படத்துக்கும் ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X