பிரின்சஸ், தங்க மனசுக்காரி: வாரிசு நடிகையை புகழ்ந்து தள்ளும் நடிகர்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிகை சாரா அலி கானை புகழ்ந்து பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனும், நடிகர் சயிப் அலி கானின் மகள் சாராவும் சேர்ந்து இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

அந்த படத்தில் நடித்தபோது கார்த்திக், சாரா இடையே காதல் ஏற்பட்டதாக பேசப்படுகிறது.

 கார்த்திக் ஆர்யன்

கார்த்திக் ஆர்யன்

சாரா பற்றி கார்த்திக் ஆர்யன் கூறியதாவது, நான் சாராவுடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சி. அவருடன் சேர்ந்து மீண்டும், மீண்டும், மீண்டும் நடிக்க ஆவலாக உள்ளேன். அவர் ஒரு ஸ்டார். தங்க மனசுக்காரர். அவரிடம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உள்ளது. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். அவர் ஒரு இளவரசி என்றார்.

 சாரா அலி கான்

சாரா அலி கான்

கார்த்திக் ஆர்யன் தற்போது பதி பத்னி அவுர் வோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஷூட்டிங்கிற்காக அவர் கிளம்பியபோது அவரை வழி அனுப்பி வைக்க சாரா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு புகைப்படக் கலைஞர்களை பார்த்ததும் அவர் முகத்தை மறைத்துக் கொண்டார். முன்னதாக சாரா தன் அம்மா, தம்பியுடன் லண்டனுக்கு சென்றுவிட்டு வந்தபோது அவரை வரவேற்க கார்த்திக் ஆர்யன் மும்பை விமான நிலையத்திற்கு வந்தார்.

 ராம்ப் வாக்

ராம்ப் வாக்

கார்த்திக் ஆர்யன் வீட்டிற்கு சாரா செல்வதும், பதிலுக்கு அவர் இங்கு வருவதும் வழக்கமாகி விட்டது. சாரா ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தார். அவரை உற்சாகப்படுத்த கார்த்திக் ஆர்யன் வந்திருந்தார். சாராவின் தம்பி இப்ராஹிம் அலி அருகில் கார்த்திக் அமர்ந்திருந்தார்.

 சுஷாந்த்

சுஷாந்த்

முன்னதாக கார்த்திக் ஆர்யன் மீது கிரஷ் உள்ளதாக சாரா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். சாரா தனது முதல் பட ஹீரோவான சுஷாந்த் சிங் ரஜ்புட்டை காதலித்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கார்த்திக் ஆர்யனுடன் சேர்த்து அவர் பெயர் அடிபடுகிறது. சாராவை பிரிந்த பிறகு சுஷாந்த் நடிகை ரியா சக்ரபர்த்தியை காதலித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X