வாரிசு நடிகையின் வீட்டில் இருந்து முகத்தை மறைத்துக் கொண்டு கிளம்பிய நடிகர்
மும்பை: சாரா அலி கான் வீட்டிற்கு சென்ற நடிகர் கார்த்திக் ஆர்யன் புகைப்படக் கலைஞர்களை பார்த்ததும் முகத்தை மறைத்துக் கொண்டு சென்றார்.
பாலிவுட் நடிகை சாரா அலி கானும் அவர் நடித்த முதல் படத்தின் ஹீரோவான சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் காதலிப்பதாக கூறப்பட்டது. சாராவும், சுஷாந்தும் ஜோடியாக ஊர் சுற்றினார்கள்.
ஒருவரின் வீட்டிற்கு மற்றொருவர் சென்று வந்தனர்.

ஈர்ப்பு
சாரா அலி கான் இம்தியாஸ் அலி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் முன்பே தனக்கு கார்த்திக் மீது ஈர்ப்பு இருப்பதாக டிவி நிகழ்ச்சியில் தெரிவித்தார் சாரா.

சாரா
கார்த்திக் ஆர்யன், சாரா இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. இது சுஷாந்துக்கு பிடிக்காமல் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் ஆர்யன் சாராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். மதியம் கார்த்திக் வர பதிலுக்கு அன்று மாலையே சாரா அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீடு
சாரா வீட்டிற்கு வந்த கார்த்திக் ஆர்யன் அங்கிருந்து கிளம்பியபோது அவரை பார்த்த புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர். உடனே அவர் முகத்தை மறைத்துக் கொண்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

காதல் ஜோடி
சாராவும், கார்த்திக் ஆர்யனும் தான் பாலிவுட்டின் புதிய காதல் ஜோடி என்று கூறப்படுகிறது. ஆனால் கார்த்திக் சாரா வீட்டிற்கு சென்றது படம் குறித்து பேசத் தான் என்று கூறப்படுகிறது. சாரா கார்த்திக் வீட்டிற்கு சென்றதும் வேலை தொடர்பாக பேசத் தானாம்.


Click it and Unblock the Notifications











