'இவங்க எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவங்க'... அதிமுக, பாஜகவை செமையா கலாய்த்த பிரபல இயக்குனர்!

அதிமுகவினர் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என இயக்குனர் கரு.பழனியப்பன் கிண்டலடித்தார்.

Recommended Video

Gurkha Movie Press Meet: அதிமுக, பாஜகவை செமையா கலாய்த்த கரு.பழனியப்பன்- வீடியோ

சென்னை: அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை கிண்டல் செய்யும் வகையில் பேசியுள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ள படம் கூர்கா. இதில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் சித்தார்த், இயக்குன் கரு.பழனியப்பன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய கரு.பழனியப்பன், அதிமுகவினர், பாஜகவிடம் இருந்து பயிற்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ராஜராஜன் பிரச்சினை:

ராஜராஜன் பிரச்சினை:

இதுகுறித்து அவர் பேசியதாவது, " ராஜராஜன் காலம் முடிந்துவிட்டது. இருண்ட காலம் களப்பிரர் காலமா, ராஜராஜன் காலமா என்பதை வரலாற்று ஆசிரியர்கள் தீர்மானித்துவிட்டுப் போகிறார்கள். வாழும் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், தஞ்சாவூரில் மீத்தேன் என்ற ஒன்றை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை திரும்பிப் பாருங்கள், ராஜராஜனை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

மயில்சாமி:

மயில்சாமி:

நம் நிலத்தை யார் பறித்தார்கள் என்பது முக்கியமில்லை. நம் கண் முன்னால் ஒருத்தன் பறித்துக் கொண்டே இருக்கிறான். அவனை கவனிக்காமல் ராஜராஜன் பற்றிப் பேசுவது முக்கியமில்லை. சித்தார்த் மற்றும் மயில்சாமி இருவரும் சமூகக் கருத்துகளை பேசிக்கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதை செய்யாதவர்கள், ஏன் இதனை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள்.

சுதந்திர இந்தியா:

சுதந்திர இந்தியா:

வரலாற்றில் 30 கோடி பேர் வாழ்ந்த இந்தியாவில் சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் 3 லட்சம் பேர் தான். அப்புறம் அதனை 30 கோடி பேர் அனுபவித்தார்கள். ஆகவே, கொஞ்சம் பேர் கத்திக் கொண்டிருப்பார்கள். அப்படி நாம் கத்திக் கொண்டே இருப்பது அவசியம்.

சௌகிதார்கள்:

சௌகிதார்கள்:

கடந்த 5 ஆண்டுகளாக சௌகிதார்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருந்தார்கள். அதே போல் இந்த 'கூர்கா'வும் நம்மை மகிழ்விப்பார். இன்னுமொரு 5 ஆண்டுகள் சவுக்கிதார்கள் நம்மை மகிழ்விக்கப் போகிறார்கள்.

முரண்பாடு:

முரண்பாடு:

இன்று காலை அனைத்து நாளிதழ்களிலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தது தான் தலைப்புச் செய்தி. அதற்கு கீழேயே தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அவசர ஆலோசனைக் கூட்டம் என்ற செய்தி இருந்தது. அந்தச் செய்தியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்கிறார் என்பதும் இருந்தது. இவர்கள் எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவர்கள்" எனக் கூறி கிண்டலடித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X