அமீரிடம் கேட்ட அந்த கேள்வி.. கடுப்பாகி மைக்கை பிடுங்கிய கரு.பழனியப்பன்!
சென்னை: ஆதம்பாவா இயக்கத்தில் அவரது மூன் பிக்சர்ஸ் தயாரிக்கும் உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், ஜாபர் சாதிக் வழக்கு குறித்தும் செய்தியாளர்கள் அமீரை சரமாரியாக கேள்வி கேட்டுக்கொண்டு இருந்ததால், கடுப்பான கரு பழனியப்பன் மைக்கை பிடுங்கி பேசினார்.
உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் இயக்குநர் அமீரிடம் பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது ஒரு செய்தியாளர், உங்களின் நண்பர் ஜாபர் சாதிக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்து நீதிமன்றம் தான் பதில் சொல்லவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் என்ன தொழில் செய்தார் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இவருக்கு இவ்வளவு பணம் எங்கு இருந்து வந்தது. அதன் பின்னணி என்ன என்று உங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா என்று கேட்டார்.

லைகாவிடம் கேளுங்கள்: இதற்கு பதில் அளித்த அமீர், இந்த கேள்வியை லைகாவின் ஓனரிடம் கேட்டீர்களா? ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வந்தால் கேட்கமாட்டீர்கள், ஆனால் என்னை போன்று தனி நபரிடம் இந்த கேள்வியை கேட்பது என்ன நியாயம். அவர் மீதும் இதுபோன்று குற்றச்சாட்டு இருக்கு ரஜினி, விஜய் கேட்டார்களா, அப்போ என்னை மட்டும் ஏன் கேட்குறீர்கள் என்று அமீர் பதில் அளித்துக்கொண்டு இருந்த போது, அமீரின் அருகில் அமர்ந்து இருந்த கரு பழனியப்பன், கடுப்பாகி அமீரிடம் இருந்து மைக்கை பிடுங்கி பேசினார்.
முடிவுக்கு வராத பேச்சு: தம்பி, எல்லாம் யானை எப்படி இருக்கும் என்பதை சொல்ல நினைக்கிறோம். நீங்கள் தடவிப் பார்ப்பது தும்பிக்கையை, நான் தடவிப் பார்ப்பது காலு, அவர் தடவிப்பார்ப்பது வயிறு, அனைவரின் கண்ணும் கட்டப்பட்டு இருக்கு யாருக்கு என்ன என்று தெரியாது. அமீர், ஊடகத்தினர் அவசரமாக தீர்ப்பு எழுதாதீர்கள் என்று சொன்னார். அதே போல, விசாரணையை நீங்கள் நடத்தாதீர்கள். இது உயிர் தமிழுக்கு படத்தின் செய்தியாளர் சந்திப்பு, இந்த கேள்வியை எல்லாம் நீங்க கேட்பீர்கள் என்று தெரிந்து தான், முன்னாடியே அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டார். இதுகுறித்து அமீர் தனியாக ஒரு பிரஸ் மீட் வைப்பார். இந்த பேச்சு முடிவுக்கு வராத பேச்சு என்று கரு பழனியப்பன் அப்போது பேசினார்.


Click it and Unblock the Notifications











