கேள்விக்குறியான சிவகுமார் இமேஜ்.. ஞானவேல் பின்னணியில் அவர்.. விளாசிய கரு. பழனியப்பன்!
சென்னை: ஞானவேல் ராஜாவின் பின்னணியில் சிவக்குமார் இருக்கிறார் என்று கரு பழனியப்பன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்த படம் கார்த்திக்கு மட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.
அமீர் பற்றி மோசமான விமர்சனம்: பருத்திவீரன் படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையேயான பல கருத்து மோதல்கள் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீருக்கு பலரும் அறிக்கை வெளியிட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மன்னிப்பு கேளுங்கள்: இதையடுத்து இயக்குனர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்திருந்தார். பொது இடத்தில் ஒருவரை கடுமையாக விமர்சித்து விட்டு வருத்தம் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, எந்த ஊடகத்தின் முன் அமீரை கடுமையாக வார்த்தையால் விமர்சித்தாரோ அதை ஊடகம் முன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சசிகுமார் மற்றும் சமுத்திரகனி ஞானவேல் ராஜாவை சாடி இருந்தனர்.
ஞானவேல் பின்னால் சிவக்குமார்: இந்நிலையில், இதுகுறித்து பேட்டி அளித்துள்ள இயக்குநரும் நடிகருமான கரு. பழனியப்பன், ஞானவேல் ராஜா பின்னால் சிவக்குமார் இருக்கிறார் என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஞானவேல் ராஜாவை ஐயா சிவக்குமார் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் என்றேன். நான் சொல்லி 18 மணி நேரத்தில் ஞானவேல் வருத்தம் தெரிவிக்கிறார். அவர் மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றாலும், வருத்தம் என்று சொல்லி இருக்கிறார். அப்போ சிவக்குமார் சொன்னால் ஞானவேல் கேட்கிறார் என்று தானே அர்த்தம்.
எந்த சம்மந்தமும் இல்லை: அது மட்டுமில்லாமல் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாகிக் கொண்டிருக்கும் போது அந்த பிரச்சனைக்கும் எனக்கும், என் குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லி இருக்கலாமே ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார் என்று கரு. பழனியப்பன் அந்த பேட்டியில் கேள்வி எழுப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











