விஜய் ஆண்டனி, உங்களுக்கு நல்லவராய் தோன்றும் அன்பு 6 மாதம் முன்பு வரை சசிக்கும் நல்லவரே: இயக்குனர்
Recommended Video

சென்னை: விஜய் ஆண்டனி...உங்களுக்கு நல்லவராய் தோன்றும் அன்புச்செழியன், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான் என இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
பைனான்ஸியர் அன்புச்செழியனின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அன்புச்செழியன் நல்லவர் என நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது பற்றி விஷாலின் சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு. பழனியப்பன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
விஜய் ஆண்டனி...
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!
விஜய் ஆண்டனி,
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும்,
கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும்,
அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும்,
மாறாதிருக்க
பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











