சூர்யா தொரத்திவிட்டா நீங்க யார்?.. பட பெயரைக்கூட சொல்ல முடியாது.. ஞானவேலுக்கு கரு.பழனியப்பன் பளார்
சென்னை: Paruthiveeran Controversy (பருத்திவீரன் சர்ச்சை) இயக்குநரும் நடிகருமான கரு.பழனியப்பன் பருத்திவீரன் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விளாசி தள்ளியிருக்கிறார்.
பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் ராம் படத்தை தயாரித்து இயக்கினார். அந்தப் படமும் சரியாக வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்திவீரன்: இப்படிப்பட்ட சூழலில் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கினார் அமீர். அந்தப் படம்தான் கார்த்திக்கு முதல் படம். தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் பருத்திவீரன் திரைப்படம் எப்போதுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கோலிவுட்டில் கிராமத்து கதைகளுக்கான ட்ரெண்டை மீண்டும் செட் செய்தது அந்தப் படம்தான்.
பிரச்னை: பருத்திவீரன் திரைப்படம் கார்த்தி மற்றும் அமீர் ஆகியோரின் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். அதேபோல் அந்தப் படம்தான் பெரிய பிரச்னையையும் அமீர் மற்றும் சூர்யா தரப்புக்கும் இடையே உருவாக்கியது. சமீபத்தில் பேட்டியளித்திருந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீரை பற்றி தரம் தாழ்ந்து பேசினார். இதற்கு அமீர் கடுமையான பதிலடி கொடுத்தார்.
அமீர் மட்டுமில்லை: அமீர் மட்டுமின்றி சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், கரு.பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து ஞானவேல் ராஜா தனது வருத்தத்தை பதிவு செய்தார். இருப்பினும் அந்த வருத்தம் ஆழ் மனதிலிருந்து வரவில்லை. போலியான வருத்தம் என்றும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக கருத்துக்கள் எழுந்துள்ளன.
கரு.பழனியப்பன் பேட்டி: இந்நிலையில் இவ்விவகாரத்தில் அமீருக்கு ஆதரவு கொடுத்த கரு.பழனியப்பன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஞானவேல் ராஜாதான் சூர்யா மற்றும் கார்த்தியை சார்ந்து இருக்கிறார். அமீர் அவர்களை சார்ந்து இல்லை. ஏனெனில் அமீர் நினைத்தால் இன்னொன்றை உருவாக்க முடியும். சூர்யாவோ கார்த்தியோ ஞானவேல் ராஜாவை துரத்திவிட்டால் அவர் யார்.
பெயரைக்கூட சொல்ல முடியாது: சூர்யாவும், கார்த்தியும் அவரை விலக்கி வைத்திருந்தபோது ஞானவேல் ராஜா எடுத்த படங்களின் பெயரைக்கூட சொல்ல முடியாது. அமீருக்கு வயதான பிறகு தன்னுடைய பேரனிடமோ பேத்தியிடமோ பருத்திவீரன் என்று நான் ஒரு படம் எடுத்தேன் என சொல்லி போட்டு காண்பிக்கலாம். ஆனால் ஞானவேல் ராஜாவோ தான் தயாரித்த படங்களின் பெயரைக்கூட குடும்பத்திடம் சொல்ல முடியாது. அவரும் பருத்திவீரனைத்தான் போட்டு காண்பிப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











