மூளையை கழற்றிவைச்சுடுவார்.. பருத்திவீரன் பிரச்னையில் தலை கொடுத்த தயாரிப்பாளர்.. கரு.பழனியப்பன் பளார்
சென்னை: Karu Palaniyappan (கரு.பழனியப்பன்) பருத்திவீரன் விவகாரத்தில் தலையிட்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயனை கரு.பழனியப்பன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் மெகா ஹிட்டானது. கார்த்தி, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்தப் படத்தை வைத்து அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கு இடையே பிரச்னை உருவானது. அதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

கார்த்தி 25: சூழல் இப்படி இருக்க கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு அமீர் தனக்கு முறையான அழைப்பு இல்லை என கூறினார். அதனையடுத்து ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில் அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்று பலவாறு வசைபாடினார். இதற்கு அமீரும் கடுமையான எதிர்வினை ஆற்றி பதிலடி கொடுத்திருந்தார்.
அமீரின் பருத்திவீரர்கள்: அமீரின் பதிலடியை அடுத்து சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன்,சினேகன், கரு.பழனியப்பன், பாரதிராஜா, கஞ்சா கருப்பு, சேரன் என பலரும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். கரு.பழனியப்பனோ ஒருபடி மேலே சென்று தன்னுடைய கண்டன அறிக்கையில் சிவக்குமாரையும் உள்ளே இழுத்தார். இதனால் விவகாரம் சூடுபிடித்தது.
ஞானவேல் ராஜாவின் வருத்தம்: சிவக்குமார் பெயர் உள்ளே வந்தது பதறியடித்த ஞானவேல் வருத்தம் தெரிவித்தார். சிவக்குமார்தான் ஞானவேல் ராஜாவை அழைத்து கண்டித்து மன்னிப்பு கேட்கும்படி உத்தரவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறத். இருந்தாலும் சூர்யாவும், கார்த்தியும் இதுவரை வாய் திறக்காததற்கு பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.
அடுத்த பஞ்சாயத்து: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் பேட்டியளித்த பத்திரிகையாளர் பிஸ்மி அமீருக்கு எதிராக வீடியோ போட சொல்லி தன்னிடம் சிலர் பேரம் பேசியதாக குறிப்பிட்டிருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் அப்படி பேரம் பேசியது தனஞ்ஜெயன் என கூறப்பட்டது. பிஸ்மி மட்டுமின்றி வேறு சிலரிடமும் தனஞ்ஜெயன் பேசியதாகவும் பேச்சு எழுந்தது. இதுகுறித்து அமீரும் ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார்.
கரு.பழனியப்பன்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கரு.பழனியப்பன் அளித்த பேட்டியில், "தனஞ்ஜெயன் போன்ற ஆட்கள் எல்லாம் வேலைக்கு செல்லும்போது மூளை, இதயம் ஆகிய இரண்டையும் கழற்றிவைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஏனெனில் அது இரண்டும் இருந்தால் உண்மையை பேச வேண்டும். அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் கபாரிடம் பேசியிருக்கிறார்.
அதேபோல் வெற்றிமாறனிடமும் பருத்திவீரன் பற்றி பேசியிருக்கிறார். ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் நானாக பேசவில்லை அவர்தான் பேசினார் என்று மாற்றி சொல்கிறார். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் தனஞ்ஜெயன் எனக்கு ஃபோன் செய்து இல்லை இல்லை நானாகத்தான் வெற்றியிடம் பருத்திவீரன் குறித்து கேட்டதாக சொல்கிறார்.
அதேபோல் சிலராக தன்னிடம் வந்து பருத்திவீரன் பற்றி பேசுவதாக சொல்கிறார். இவர் என்ன சர்ச்சில் இருக்கும் பாதிரியாரா வருபவர்களுக்கு எல்லாம் பாவமன்னிப்பு கொடுப்பதற்கு. ஊரில் இருக்கும் நியாயம் அனைத்தையும் தனஞ்ஜெயன் பேசுவார். ஆனால் அவர் விஷயத்தில் நியாயத்தை பேச சொன்னால் சொதப்புவார்" என்றார்


Click it and Unblock the Notifications











