கரு.பழனியப்பன், அருள்நிதி இணையும் அரசியல் நையாண்டி படம்!

By Vignesh Selvaraj

சென்னை : கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது. இதனை அரசியல் நையாண்டி படமாக எடுக்க கரு.பழனியப்பன் திட்டமிட்டுள்ளார்.

சமீபகால அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து பலரும் தொலைக்காட்சி கலந்துரையாடலில் விவாதித்து வருகிறார்கள். இதில் கரு.பழனியப்பனின் பேச்சு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Karu pazhaniappan and Arulnidhi team up for a upcoming movie

கரு.பழனியப்பன் கடந்த 2013-ம் ஆண்டு 'ஜன்னல் ஓரம்' படத்தை இயக்கினார். அதன்பிறகு வேறு படங்கள் எதையும் இயக்கவில்லை. அவர் அடுத்ததாக மாதவன் நடிக்கும் படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில் தற்போது தனது அடுத்த படத்தை அரசியல் நையாண்டிப் படமாக எடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளார் கரு.பழனியப்பன். இதில் அருள்நிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
மு.மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அருள்நிதி. இதனையும் ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X