அம்பேத்கர் படத்துக்கு தமிழக அரசு ரூ 10 லட்சம் நிதி!

By Chakra

சென்னை: தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ள அம்பேத்கர் திரைப்படத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை அதன் தயாரிப்பாளரிடம் முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாழ்த்தப்பட்ட, நலிந்த சமுதாய மக்களின் உரிமைக்காகப் போராடிய அரசியல் சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் திரைப்படத்தினை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டால், அரசு சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பின்படி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அம்பேத்கர் திரைப்படம் இன்று வெளியிடப்படுவதையொட்டி, அப்படத்தைத் தயாரித்துள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் துணைப் பொதுமேலாளர் டி.இராமகிருஷ்ணனிடம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது, தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலர் ஆர்.சிவகுமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் கா.பாஸ்கரன், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத் துணை மேலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் படத்தை எடுத்த திராவிடர் கழகத்துக்கு தமிழக அரசு ரூ 92 லட்சம் வழங்கியது. அந்தப் படத்தின் வெளியீட்டுக்கும் பெரிதும் உதவியது.

ஆனால் அம்பேத்கர் படம் மிகச் சில திரையரங்குகளில் மட்டுமே ஒரு காட்சியாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X