என்ன இப்படி சொல்லிட்டாரு.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த பிரபலம் கலந்துக்கவே இல்லையாம்.. ரூமருங்க!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 தொடங்க உள்ள நிலையில், ஏகப்பட்ட பிரபலங்களின் பெயர்கள் நாள் தோறும் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது.

அதே போல, சில பிரபலங்கள், அய்யோ நானா? பிக் பாஸுக்கா? ஆள விடுங்கப்பா சாமி என்றும், எல்லாமே ரூமருங்க நம்பாதீங்க என்பது போலவும் சொல்லிட்டு டாட்டா காண்பித்து விடுகின்றனர்.

அதுபோல, சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என வைரலாக எதிர்பார்க்கப்பட்ட கருண் ராமன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட்

செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட்

பிரபல நடிகைகளான நயன்தாரா, திரிஷா, ரைசா வில்சன், நமீதா என ஏகப்பட்ட பிரபலங்களுக்கு செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் ஆக பணியாற்றி கருண் ராமன், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் தீயாக பரவின. ஆனால், அவரே தற்போது அதனை மறுத்துள்ளார்.

எனக்கு வேற வேலை இருக்கு

எனக்கு வேற வேலை இருக்கு

செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் மற்றும் ஃபேஷன் கொரியோகிராபரான கருண் ராமன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதை விட சூப்பரான ஒரு வேலை எனக்கு இப்போ இருக்கு. வீண் வதந்திகளை நம்பி யாரும் ஏமாந்து போக வேண்டாம் என பொசுக்குன்னு சொல்லிபுட்டார்.

இவர்கள் இல்லை

இவர்கள் இல்லை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ளப் போகிறார் என்கிற கெஸ்ஸிங் லிஸ்ட் வைரலாகி வரும் நிலையில், இதுவரை யாரெல்லாம் கழட்டி விடப்பட்டு இருக்கிறார்கள், கழண்டு கொண்டுள்ளனர் என்பதை பார்ப்போம். சூர்யா தேவி, டிக்டாக் இலக்கியா, ரவீந்திரன், பூனம் பஜ்வா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் இப்போ கருண் ராமன்.

பெரிய சிக்கல்

பெரிய சிக்கல்

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ள பெரிய சிக்கல் என்ன வென்றால் வரும் 19ம் தேதி முதல் தொடங்கப் போகும் ஐபிஎல் போட்டி தான். பிக் பாஸ் ரசிகர்கள் வெர்சஸ் ஐபிஎல் ரசிகர்கள் என ஒரு பெரிய போட்டியே நிலவுமா? அல்லது ஐபிஎல் பார்த்து விட்டு எப்போ வேண்டுமானாலும் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் பார்த்துக் கொள்வேன் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Recommended Video

என் நண்பன் SPB மகள் திருமணத்திற்கு வருவான் | ACTOR MOHAN RAMAN CHAT PART-02| FILMIBEAT TAMIL
ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2, அரசியல், லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் என உலக நாயகன் கமல்ஹாசனை சுற்றித் தான் ஏகப்பட்ட பொறுப்பு குவிந்து கிடக்கிறது. இவை எல்லாவற்றையும் ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு கமல்ஹாசன் கச்சிதமாக முடிப்பாரா? என்ன செய்யப் போகிறார் என்பதை வெயிட் பண்ணி வாட்ச் பண்ணுவோம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X