தனுஷ் ஆபாச நடிப்பு: வெற்றிகொண்டானுக்கு கருணாநிதி கண்டனம் சென்னை:நடிகர் தனுஷ் ஆபாசமாக நடிப்பதாக பட்டுக்கோட்டை கூட்டத்தில் திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் பேசியதற்கு கருணாநிதிகண்டனம் தெரிவித்துள்ளார்.கூட்டத்தில் பேசிய வெற்றி கொண்டான் மன்மதராசா பாட்டில் தாயேண்டா என்ற அந்த பெண் கேட்க அவர் இடுப்பில் அமர்ந்துகொண்டு ஏதோதோ செய்கிறார் தனுஷ். அவரை யார் என்று கேட்டேன் சூப்பர் ஸ்டார் மருமகன் என்றார்கள். இளைய தலைமுறைக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க இவர் ஒருவரே போதும் என்று பேசினார். இதற்கு ரஜினி, தனுஷ்ரசிகர்கள் மன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வெற்றிகொண்டான் பேச்சுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது: இளம் கதாநாயகர்களில் ஒருவரும், அரசியல் பிரச்சினை எதிலும் சம்பந்தப்படாமல் இருப்பவருமான தனுஷ் பற்றியும் கட்சிசார்பற்ற சில கலைஞர்களைப் பற்றியும் நமது கழக மேடைகளில் குறிப்பாக தம்பி வெற்றி கொண்டான் போன்றோர்கள்விரும்பத்தகாத வகையில் தேவையற்ற விமர்சனங்களை செய்வதாக சில பத்திரிகைகள் பெரிய அளவில் திமுக மீது வெறுப்பைதூண்டிவிட முயற்சி மேற்கொள்வதை நம்மால் உணரமுடிகிறது. கழக மேடையில் பேசுவதற்கு இப்போதுள்ள அதிமுக அரசைப் பற்றி எத்தனையோ விவகாரங்கள் இருக்கும் போது அவற்றைபட்டியலிட்டு அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமே நிறை வேற்றி உள்ளபோது அவைகளை குறிப்பிட்டு பொதுமக்களிடம் நமது கழக பேச்சாளர்கள் விமர்சித்தாலே போதுமானது.இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு கழகத்தினர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றி நடந்து கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை:
நடிகர் தனுஷ் ஆபாசமாக நடிப்பதாக பட்டுக்கோட்டை கூட்டத்தில் திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் பேசியதற்கு கருணாநிதிகண்டனம் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய வெற்றி கொண்டான் மன்மதராசா பாட்டில் தாயேண்டா என்ற அந்த பெண் கேட்க அவர் இடுப்பில் அமர்ந்துகொண்டு ஏதோதோ செய்கிறார் தனுஷ். அவரை யார் என்று கேட்டேன் சூப்பர் ஸ்டார் மருமகன் என்றார்கள்.
இளைய தலைமுறைக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க இவர் ஒருவரே போதும் என்று பேசினார். இதற்கு ரஜினி, தனுஷ்ரசிகர்கள் மன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் வெற்றிகொண்டான் பேச்சுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:
இளம் கதாநாயகர்களில் ஒருவரும், அரசியல் பிரச்சினை எதிலும் சம்பந்தப்படாமல் இருப்பவருமான தனுஷ் பற்றியும் கட்சிசார்பற்ற சில கலைஞர்களைப் பற்றியும் நமது கழக மேடைகளில் குறிப்பாக தம்பி வெற்றி கொண்டான் போன்றோர்கள்விரும்பத்தகாத வகையில் தேவையற்ற விமர்சனங்களை செய்வதாக சில பத்திரிகைகள் பெரிய அளவில் திமுக மீது வெறுப்பைதூண்டிவிட முயற்சி மேற்கொள்வதை நம்மால் உணரமுடிகிறது.
கழக மேடையில் பேசுவதற்கு இப்போதுள்ள அதிமுக அரசைப் பற்றி எத்தனையோ விவகாரங்கள் இருக்கும் போது அவற்றைபட்டியலிட்டு அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமே நிறை வேற்றி உள்ளபோது அவைகளை குறிப்பிட்டு பொதுமக்களிடம் நமது கழக பேச்சாளர்கள் விமர்சித்தாலே போதுமானது.
இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு கழகத்தினர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றி நடந்து கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications