"என்ன கொடும இது" - கருணாகரணுக்கும் மொட்ட ராஜேந்திரனுக்கும் கள்ளக்காதலாம்!
Recommended Video

சென்னை : கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா ஆகியோர் நடிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து வெளிவந்த 'ஹர ஹர மகாதேவகி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி. ஜெயக்குமார்.
அடுத்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தையும் சந்தோஷ் இயக்க தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார்
இந்த விழாவில் பேசிய படத்தின் டைரக்டர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், "ஹரஹர மஹாதேவகி படத்தைப் பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் பெட்டரா கொடுத்திருக்கலாம்னு சொன்னாங்க. இந்தப் படத்தில் ஃபுல் டோசேஜ் கொடுத்து எல்லோரையும் திருப்திபடுத்த முயற்சி பண்ணிருக்கோம்." என்றார்.

டைவர்ஸ்
இந்த விழாவில் பேசிய நடிகர் கருணாகரன், "என்னோட ரோல் ஹரஹர மஹாதேவகி படத்தோட நீட்சினு சொல்லலாம். இந்தப் படத்துக்கு அப்புறம் எனக்கு டைவர்ஸ் ஆகிடக்கூடாதுனு வேண்டிக்கோங்க." என அதிர்ச்சி கிளப்பினார்.

மொட்டை ராஜேந்திரனுடன் கள்ளக்காதல்
மேலும் அவர் பேசும்போது, "ஒரு பொண்ணோட தொடர்பு இருந்தா ஏதாவது பிரச்னை வரும். ஆனா, மொட்டை ராஜேந்திரனோட எனக்கு தொடர்பு இருந்தா என்ன மாதிரி பிரச்னையெல்லாம் வரும்னு யோசிச்சிப் பாருங்க." என்றார் கருணாகரன்.

கௌதம் கார்த்திக்
ஜாங்கிரி மதுமிதா பேசும்போது, "கௌதம் கார்த்திக் இந்தப் படத்தில் சில காட்சிகளில் அஞ்சாறு டேக் வாங்கிடுவார். அதுவும் டயலாக் மறந்து போய் இல்லை; சின்ன காமெடிக்கு அதிகமா சிரிச்சு டேக் வாங்கிடுவார்" எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











