ரசிகர்களை பார்த்தால் விஜய்யின் தராதரம் தெரிகிறது: கருணாகரன்
சென்னை: தன்னிடம் மோதிய விஜய் ரசிகர்களை விளாசியுள்ளார் நடிகர் கருணாகரன்.
சமூக வலைதளங்களில் மோசமாக நடந்து கொள்ளும் ரசிகர்களால் நடிகர் விஜய்யை வெறுக்கத் துவங்கியதாக நடிகர் கருணாகரன் தெரிவித்தார். இதை பார்த்த தளபதி ரசிகர்கள் அவரை விளாசித் தள்ளினர்.
இந்நிலையில் அவர் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
கமெண்ட்
ரசிகர்கள் போடும் கமெண்டுகள் அந்த நடிகரின் தராதரத்தை விவரிக்கிறது என்று ட்வீட்டியுள்ளார் கருணாகரன். ரசிகர்கள் செய்த காரியத்தால் விஜய்க்கு தான் கெட்டப் பெயர் ஏற்படுகிறது.
சர்கார்
நான் தமிழகத்தை சேர்ந்தவனா என்று முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம். சர்கார் தமிழ் தலைப்பா என்று நான் எப்பொழுதாவது கேட்டேனா என்கிறார் கருணாகரன்.
அடிமை
அடுத்த கேள்வி என் தாய் மொழி பற்றி. நீங்கள் ரெடியா சர்கார் அடிமை என்று கருணாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் ட்வீட்டுகளை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை கேவலமாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கம்முனு
நீங்கள் என்னை மிரட்டுவது பதில் அளிக்க முடியாத உங்களின் இயலாமையை காட்டுகிறது. அது எனக்கு பிடித்துள்ளது #Gammunu என்று தெரிவித்துள்ளார் கருணாகரன்.
நடிகர்
ஒரு வேளை யாராவது கருணாகரனின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ஒருவருக்கு ஏற்பட்டு அவரிடமே கேட்டார். அதற்கு அவர் யாரும் ஹேக் செய்யவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











