'நான் அந்த மாதிரி வளரவில்லை'... இயக்குனர் புகாருக்கு நடிகர் கருணாகரன் விளக்கம்!

தனக்கும் கந்துவட்டி கும்பலுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: பொதுநலன் கருதி இயக்குனர் கூறுவது போல் தனக்கும் கந்துவட்டி கும்பலுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார்.

கருணாகரன், சந்தோஷ், அதித் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பொதுநலன் கருதி. கந்துவட்டி மாஃபியாக்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கியிருந்தார்.

Karunakaran clarifies about the allegation on him

இப்படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் கருணாகரன் எதுவும் செய்யவில்லை என்றும், கந்துவட்டி கும்பலுடன் சேர்ந்துகொண்டு தங்களை மிரட்டுவதாகவும் படக்குழுவினர் புகார் கூறினர். மேலும் இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றையும் கொடுத்தனர்.

இந்நிலையில் பொதுநலன் கருதி இயக்குனர் கூறுவது போல் தனக்கும் கந்துவட்டி கும்பலுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார். படம் வெற்றி பெற வேண்டும் என்றே தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "பொதுநலன் கருதி இயக்குனர் சீயோன் மற்றும் இணை தயாரிப்பாளர் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. எனக்கும் கந்துவட்டி கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏனெனில் நான் அப்படி வளரவில்லை.

Karunakaran clarifies about the allegation on him

எனது தந்தை காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது பெற்றவர். இவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற வழியில் நான் வளர்க்கப்படவில்லை.

உயிரை பணயம் வைத்து நான் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன். கந்துவட்டிகாரர்களுடன் சேர்ந்து படத்துக்கு எதிராக நான் செயல்படுவதாக கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை" என நடிகர் கருணாகரன் விளக்கம் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X