விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு!
நடிகர் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
சென்னை: விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு செய்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், உசுப்துரன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துரவன்கிட்ட கம்முன்னும் இருக்கனும். அப்போ தான் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என ஒரு வாக்கியத்தை கூறினார்.

இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் கருணாகரன், "இந்த அட்வைஸ் மற்றவர்களுக்கு தானா. உங்கள் ரசிகர்களுக்கு இல்லையா" என கேள்வி எழுப்பினார். அவ்வளவு தான், தானாக வந்து ஒருத்தன் சிக்கிட்டான்டானு கிளம்பிய விஜய் ரசிகர்கள், கருணாகரனை ஒருபிடிபிடித்துவிட்டனர்.
இதனால் கோபம் அடைந்த கருணாகரன், தனது கருத்துக்களையும் தொடர்ந்து தெரிவிக்க வார்த்தை மோதல்கள் அதிகரித்தன.விஜய் ரசிகர்கள் கருணாகரனை தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தன்னை பற்றி அவதூறாகப் பேசிய விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு செய்துள்ளார். இன்று பிற்பகல் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











