ரஜினியைச் சந்தித்தது என் வாழ்நாள் சாதனை! - நடிகர் கருணாகரன் பரவசம்
கோவை: சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தது என் வாழ்நாள் சாதனையாகவே கருதுகிறேன், என்கிறார் நடிகர் கருணாகரன்.
பீட்சா, சூது கவ்வும், யாமிருக்க பயமேன், ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் கருணாகரன்.
இந்தப் படங்களில் அவரது திறமையான நடிப்பு, அவரை இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.

கலகலப்பு
சமீபத்தில் கோவை வந்த கருணாகரன், லிங்காவில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து கூறுகையில், "கலகலப்பு'தான் எனது முதல் படம். சுந்தர் சி. அறிமுகப்படுத்தினார். பிறந்தது சென்னை என்றாலும் படித்ததெல்லாம் டெல்லியில்.
பள்ளி பருவம் முதல் நாடகத்தில் நடிக்க மிகவும் விருப்பம். வீட்டில் ஆரம்பத்தில் நடிக்க அனுமதியில்லை. என்னுடைய தோழி மூலம் மற்றொரு கல்லூரியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன்.

ஜிகிர்தண்டா
ஜிகர்தண்டா படத்தில் நடிக்க முக்கிய காரணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்தான். உடன் நடித்த சிம்ஹாவின் நட்பு, கதாநாயகன் என்று பாராமல் சித்தார்த் நண்பர் மாதிரி பழகியது, படத்தில் நடித்த அனைவரின் ஒத்துழைப்பு ஆகியவைதான் படத்தின் வெற்றிக்கு காரணம் ஆகும்.

லிங்கா
ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். ஒரு நாள் லிங்கா குழுவில் இருந்து போன் வந்தது. நீங்க லிங்கா படத்தில் தலைவரோட நடிக்கிறீங்க என்றனர். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

வாழ்நாள் சாதனை
முதல் நாள் சூட்டிங்கில் தலைவரை நேரில் பார்த்து நான் வியந்துபோனேன். எளிமைக்கு இலக்கணம் ரஜினி சார்தான். தலைவரை சந்தித்தது என் வாழ்நாளின் சாதனை. ரஜினி சார் என்னிடம் அன்பாக பழகினார். பீட்சா படம் பற்றி பேசினார்.

அனைவருக்கும் பிடித்த மாதிரி
தொடர்ந்து அனைவருக்கும் பிடித்த மாதிரி நடிக்க வேண்டும். இப்போது இருக்கும் பெயரை காப்பாற்ற வேண்டும்.
தற்போது ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சாலை, நண்பேண்டா, கப்பல், மகாபலிபுரம், லிங்கா போன்ற படங்களில் நடிக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











