முதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்
Recommended Video

சென்னை: நடிகர் கருணாகரன் எஸ்.வி. சேகரின் ட்வீட்டுக்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்துள்ளார்.
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடப் பணி முடியாததால் இன்னும் 6 மாதத்திற்கு தேர்தலை நடத்த வேண்டாம் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்று நடிகர் எஸ்.வி. சேகர் ட்வீட்டியுள்ளார்.
எஸ்.வி. சேகர்
இன்று நடைபெற்ற நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு)மறைந்த பல கலைஞர்களுக்கு,முன்னாள் முதல்வருக்கு, அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய் அவர்களுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தத் தெரியவில்லை. இது அறியாமையா ⁉️. அகந்தையா ⁉️ என்று கேட்டு ட்வீட்டியுள்ளார் எஸ்.வி. சேகர்.
கருணாகரன்
எஸ்.வி. சேகரின் ட்வீட்டை பார்த்த நடிகர் கருணாகரனோ, நம் முதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார். தலைமை செயலாளரான கிரிஜா வைத்தியநாதனை முதல்வர் என்று கூறியுள்ளார் கருணாகரன்.
மச்சினன்
கருணாகரன் இப்படி பதில் அளிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதை பார்த்த ஒருவரோ, ஆனாலும் கருணாகரன் உங்களுக்கு இவ்வளவு தைரியம் கூடாது... சி.எம் மச்சினனுக்கே கெத்து காட்டுறிங்களே... என்று கமெண்ட் போட்டுள்ளார்.
அதிர்ச்சி
கருணாகரனின் பதிலை பார்த்து பலர் அவரை பாராட்டியிருந்தாலும், சிலர் விமர்சித்தும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











