சௌந்தர்யா-அஸ்வினுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து!

By Chakra

Karunanidhi blesses Soundarya - Ashwin
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமண வரவேற்பில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களுக்கு ஆசி வழங்கினார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்-ஹேமா ராம்குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்கள் திருமணம், சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை - ராஜா முத்தையா மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. ஏராளமான அரசியல், சினிமா விஐபிக்கள் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினர்.

மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, நேற்று மாலை 6-30 மணிக்கு தொடங்கியது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு, முதல்வர் கருணாநிதியும் அவரது மனைவி தயாளு அம்மாளும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

மணமகள் சௌந்தர்யாவும், மணமகன் அஸ்வினும், முதல்வர் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்கள். ரஜினி மற்றும் அவரகது குடும்பத்தினருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார் முதல்வர்.

முதல்வடன் மத்திய அமைச்சர் ராசா, டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அமைச்சர் துரை முருகன் ஆகியோர் வந்திருந்தார்கள்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து:

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன், முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் அன்பழகன், பரிதி இளம்வழுதி, மேயர் சுப்பிரமணியன், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய மந்திரிகள் திருநாவுக்கரசர், அன்புமணி, நடிகர்-எழுத்தாளர் சோ, தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமி, சி.பி.ஐ.முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் ஜீவா, முரளி, பார்த்திபன், சுந்தர் சி, ஜித்தன் ரமேஷ், மன்சூர் அலிகான், மோகன், எம்.எஸ்.பாஸ்கர், வினித், பாண்டு, தியாகு, நடிகைகள் குஷ்பு, ஜெயசித்ரா, ராஜசுலோசனா, ராஜஸ்ரீ, ரம்யா கிருஷ்ணன், இயக்குநர்கள் ஷங்கர் பி.வாசு, தரணி, சுரேஷ் கிருஷ்ணா, சந்தானபாரதி, அமீர்ஜான், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர்கள் ஏஆர் ரஹ்மான், தேவா, ஜி.வி.பிரகாஷ், பட அதிபர்கள் கே.ஆர்.ஜி, பி.எல்.தேனப்பன், காட்ரகட்ட பிரசாத், முரளி மனோகர், சூர்ய ராஜ்குமார், சித்ராலட்சுமணன், கே.ராஜன், கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X